நாட்டில் தற்­போது இரண்டு வகை­யான சட்­டங்கள்  அமுல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.  வடக்கில் ஒரு சட்­டமும் தெற்கில் மற்­று­மொரு சட்­டமும் நடை­மு­றைப்ப­டுத்­தப்­ப­டு­வ­தாக கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரோஹித அபே­கு­ண­வர்தன தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பத்­த­ர­முல்லையி­லுள்ள அக்­கட்­சியின் தலைமை­ய­கத்தில் நடை­பெற்­றது. அந் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நல்­லாட்சி அர­சாங்கம் ஜனா­தி­பதி தேர்தல் காலத்தில் ரத்­து­பஸ்­வெல சம்­பவம் பற்றி பேசி­யது. எனினும் நேற்று (நேற்று முன்­தினம்) தம்­புத்­தே­க­மயில் விவ­சா­யத்­திற்­காக நீர் கேட்ட மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட பதிலை அவ­தா­னிக்க முடிந்­தது. பொலி­ஸா­ரைக்­கொண்டு அம்­மக்கள் மீது தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டது.

ஆகவே பொலிஸார் வடக்கில் ஒரு வித­மா­கவும்  தெற்கில் மற்­றொரு வித­மா­கவும் செயற்­ப­டு­கின்­றனர். வடக்கு மாகாண சபை உறுப்­பினர் சிவா­ஜி­லிங்கம் இரா­ணுவ முகா­மிற்கு முன்னாள் ஆர்ப்­பாட்டம் செய்­கின்ற போதும், வடக்கு மாகாண அமைச்சர் தேசிய கொடியை ஏற்ற முடி­யா­தெனக் குறிப்­பி­டு­கின்ற போதும் அவற்றை சாதா­ரண செயற்­பா­டா­கவே அர­சாங்கம் கரு­து­கி­றது.

ஆனால் தெற்கில் மக்கள் அமை­தி­யான முறையில் ஆர்ப்­பாட்டம் செய்­கின்ற சந்­தர்ப்­பங்­களில் அவ் ஆர்ப்­பாட்டக் காரர் கள் மீது தாக்­குதல் நடத்­து­கின்­றனர். மத்­தள விமான நிலை­யத்தை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­பனை செய்ய வேண்டாம் என ஆர்ப்­பாட்டம் செய்த போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளையும் கைது செய்து சிறை யில் அடைத்­தனர்.

அத்­துடன் 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் எட்டாம் திக­திக்கு முன்னர் ஐக்­கிய தேசியக் கட்சி எவ்வாறு துண்டு துண்டா கப் பிரிந்து கிடந்ததோ அவ்வாறான நிலையை தற்போதும் அடைந்துள்ளது.  அக்கட்சிக்குள் உட்பூசல் அதிகரித்து வருவ தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.