இலங்­கையில் துறை­முகம் மற்றும் நெடுஞ்­சா­லை­களை அமைப்­ப­தற்கு இந்­தியா ஆர்வம் காட்­ட­வில்லை. அத­னா­லேயே குறித்த வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு சீனாவை நாட வேண்டியேற்­பட்­ட­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். 

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ இந்­தி­யா­விற்­கான விஜ­யத்தை முடித்­துக்­கொண்டு நாடு திரும்பும் வழியில் பெங்­க­ளூருவில் வைத்தே ஊட­க­வி­ய­லா­ள­ர்களிடம் இதனைத் தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இலங்­கையில் துறை­முகம் மற்றும் நெடுஞ்­சா­லை­களை அமைக்கும் வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்­கு­மாறு இந்­தி­யா­விடம் வேண்­டிக்­கொண்டோம். எனினும் இந்­திய அர­சாங்கம் அதனை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. எவ்­வா­றி­ருந்­த­போதும் அம்­பாந்­தோட்­டையில் துறை­முகம் அமைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்­தியா இருந்­தது.

எனினும் நாம் குறித்த வேண்­டு­கோளை யுத்த காலத்­தி­லேயே முன்­வைத்­தி­ருந்தோம். அதனால் இந்­திய அர­சாங்கம் அதனை நிரா­க­ரித்­தி­ருக்­கலாம் என நினைக்­கிறேன். ஆகவே குறித்த செயற்­றிட்­டத்தை நாம் சீனா­விடம் முன்­வைத்தோம். அந்த யோ­சனை தொடர்பில் சீனா உட­னடி நட­வ­டிக்­கைக்குத் தயா­ரா­னது.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தின் முக்­கி­யத்­துவம் பற்றி எமக்கு நன்கு தெரியும். அத­னா­ேலயே அத்­து­றை­முகப் பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்குத் தயா­ரானோம். நாட்டை பிர­தா­ன­மாகக் கொண்டு நட­வ­டிக்கை எடுப்­பதே சிறந்த  தலை­வரின் தலை­யாய கட­மை­யாகும். 

எனினும் இலங்­கையின் தற்­போ­தைய அர­சாங்கம் தேசிய சொத்­து­க்களை விற்­பனை செய்­கி­றது. தனியார் மய­மாக்­க­லுக்கு எதி­ரா­ன­தா­கவே எமது கொள்கை இருந்­தது. தனியார் மய­மாக்கல் மூலம் நாட்டை கட்­யெ­ழுப்ப முடியும் என நாம் எதிர்­பார்க்­க­வில்லை. 

இலங்கை, இந்­தி­யா­வுடன் சிறந்த உற வைப் பேணி வந்­தது. எனினும் கடந்த காலங்­களில் எமக்கும்  இந்­தி­யா­விற்­கு­மி­டையில் தவ­றான புரி­தல்கள் ஏற்­பட்­டி­ருந்­தன. 

மேலும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் நாம் பெரு­வெற்றி பெற்­றுள்ளோம். அதன் மூலம் மக்கள் எமக்கு ஆணை வழங்­கி­யுள்­ளனர். அத்­துடன் குறித்த தேர்­தலை நாம் உள்ளூர் அதி­கார சபை­களின் ஆட்­சியைத் தீர்­மா­னிக்கும் தேர்­த­லாகக் கரு­த­வில்லை. தேசிய அர­சாங்­கத்­திற்கு எதிரான ஆணையாகவே கருதுகிறோம். நல்லாட்சி அரசாங்கத்தின் கடந்த மூன்றாண்டு கால வேலைத்திட்டங்களுக்கு மக்கள் உள்ளூ ராட்சி மன்றத் தேர்தலூடாக எதிர்ப்பினைத்  தெரிவித்துள்ளனர் என்று  அவர் குறிப் பிட்டுள்ளார்.