தேசிய அர­சாங்­கத்தை வீட்­டுக்­க­னுப்பும் வேலைத் ­திட்­டத்தின் இரண்டாம் அத்­தி­யாயம் எதிர்­வரும் ஏழாம் திகதி நுகே­கொ­டையில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அத­னைத்­தொ­டர்ந்து நாடு தழு­விய ரீதியில் மக்­களை விதிக்­கி­றக்கி பேரணி நடத்­த­வுள்ளோம். ஆகவே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு முது­கெ­லும்­பி­ருக்­கு­மாயின் நுகே­கொடை பேரணில் கலந்­து­கொள்ள வேண்டும். அதுவே அவர்­க­ளுக்­கான இறுதிச் சந்­தர்ப்­ப­மாக அமையும் என கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அழுத்­க­மகே தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள அக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் பின்னர்,  பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க பதவி விலக வேண்டும் எனவும் அதனைத் தொடர்ந்து புதிய அர­சாங்கம் நிய­மிக்­கப்­பட வேண்டும் எனவும் குறிப்­பிட்டு வந்தோம். எனினும் அது நடை­பெ­ற­வில்லை. மேலும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடை­பெற்று ஒரு மாத காலத்தை அண்­மிக்­கி­றது. எனினும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை அமைக்க முடி­யாத நிலைக்கு அர­சாங்கம் தள்­ளப்­பட்­டுள்­ளது. 

தேர்தல் நடை­பெற்ற பின்னர் சபை­களை அமைப்­ப­தற்கு இவ்­வாறு நீண்ட காலம் எடுத்த சந்­தர்ப்பம் இது­வாகும். தேர்­தலை நடத்­தாது நல்­லாட்சி அர­சாங்கம் நீண்ட காலம் இழுத்­த­டிப்பு செய்து வந்­தது. அத்­துடன் தற்­போது உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை அமைப்­ப­தற்கும் முது­கெ­லும்­பற்ற நிலையில் அர­சாங்கம் உள்­ளது.

ஆகவே நல்­லாட்சி அர­சாங்­கத்தை ஆட்­சி­பீ­டத்­தி­லி­ருந்து வீட்­டுக்­க­னுப்ப வேண்டும். அதற்­காக மக்­களை வீதிக்­கி­றக்கி போரா­ட­வுள்ளோம். எனவே எதிர்­வரும் ஏழாம் திகதி நூகே­கொ­டையில் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக பேரணி நடத்­த­வுள்ளோம்.

மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் தற்­போது சிங்­கப்பூர் முக­வ­ரியில் இல்லை என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். எனவே அர்­ஜுன மகேந்­திரன் தொடர்பில் பிர­த­மரே பொறுப்­புக்­கூற வேண்டும்.   அர்­ஜுன  மகேந்­திரன் பிடி­பட்டால் சகல விட­யங்­களும் வெளிப்­படும். எனவே அவரை மறைத்து வைப்­ப­தற்கே பிர­தமர் முயற்­சிக்­கிறார். 

மேலும் ரணில் விக்­ர­ம­சிங்க தனது பத­வியை தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்கே இவ்­வாறு செய்­கிறார். அவ­ருக்கு பிர­தமர் பதவி இல்­லா­மல்­போ­கு­மாயின் சகல விட­யங்­க­ளையும் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் வெளி­யி­டுவர். ஆக­வேதான் மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளு­நரை மறைத்து வைத்­துள்­ளனர்.  அர்­ஜுன மகேந்­தி­ரனை திட்­ட­மிட்டே மறைத்து வைத்­துள்­ளனர். 

அத்­துடன் பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­படும் நம்­பிக்­கை­யில்லாப்  பிரே­ர­னைக்கு நாம் ஆத­ரவு வழங்­குவோம்.  அவ­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை கூட்டு எதிக்­கட்சி கொண்டுவருவதற்கு ஏற்கனவே தயாரக இருந்தது. எனினும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சி அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனை கொண்டுவருமாக இருந்தால் அதற்கு நாம் ஆதரவு வழங்குவோம். மேலும் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள பிரபலங்கள் உட்பட அதிகளவானோர் அதற்கு ஆதரவு  வழங்கவுள்ளனர் என்றார்.