இளைஞர் அணி­களை உரு­வாக்கி விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்டும் : சி.வி. விக்­கி­னேஸ்­வரன்

Published By: Priyatharshan

02 Mar, 2018 | 09:05 AM
image

தற்­போது எமது இளைஞர் அணி­களை உரு­வாக்க தக்க தருணம் வந்­துள்­ளது. வட கிழக்கு மாகா­ணங்­களில் இளைஞர் அணி­களை ஒன்று சேர்க்­கவும் அவர்­க­ளுக்கு எமது தமிழ் மக்கள் பேர­வையூ­டாக போதிய அர­சியல் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தவும் வேண்­டி­யுள்­ளது என்று வட­மா­காண முத­ல­மைச்­சரும் பேர­வையின் இணைத் தலை­வ­ரு­மான சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

சில அர­சியல் கட்­சிகள் நாங்கள் இந்­தி­யா­வுடன் கிட்­டிய உறவைப் பேணு­வதை விரும்­பு­கின்­றார்கள் இல்லை. தமிழ் மக்­க­ளுக்கு போரின் கடைசி நாட்­களில் நடந்­த­வற்­றிற்கு இந்­தி­யாவும் பொறுப்பு என்ற முறையில் அவ்­வா­றான ஒரு எண்ணம் அவர்­க­ளுக்கு இருக்­கலாம். ஆனால் அன்­றைய நிலை வேறு. இன்­றைய நிலை வேறு. இந்­தி­யாவின் அனு­ச­ரணை இல்­லாமல் வட கிழக்குத் தமிழ் மக்கள் தமது நியா­ய­மான குறிக்­கோள்­களை அடைய முடி­யாது என்ற எண்ணம் கொண்­ட­வர்­களும் எம்முள் இருக்­கின்­றார்கள். ஆகவே எம்­மி­டையே இது பற்­றிய கருத்து வேறு­பா­டு­களை முடிந்­த­ளவு நீக்­கு­வது அவ­சி­ய­மா­கின்­றது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

தமிழ் மக்கள் பேர­வையின் விசேட கூட்டம் நேற்றும் யாழ்ப்­பாணம் பொது நுலக கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே விக்­கி­னேஸ்­வரன் இவ்­வாறு தெரி­வித்தார். 

இங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது,

தமிழ் மக்கள் பேர­வை­த­ன­து­வே­கத்தைக் கூட்டிப் பய­ணிக்க வேண்­டி­ய­த­ருணம் தற்­போ­து­உ­ரு­வா­கி­யுள்­ளது. சென்­ற­முறை நாம் கூடி­ய­போது தேர்­தல்கள் விரைவில் நடை­பெற இருப்­ப­தாகக் கூறினோம். ஆனால் தேர்­தலில் தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம் என்­ற­ரீ­தியில் பக்கச் சார்­பற்று விளங்கும் என்றும் கூறப்­பட்­டது. ஆனால் எம்­முடன் இருக்கும் கட்­சிகள் தேர்­தலில் கலந்­து­கொண்­டதை தமிழ் மக்கள் பேரவை எதிர்க்­க­வில்லை. தேர்தல் முடி­வு­களின் படி எமது இயக்கம் வெளி­யிட்­டு­வந்த கருத்­துக்கள்,கொள்­கை­களை மக்கள் போதிய அளவு ஏற்றுக் கொண்­ட­தாக தெரி­ய­வந்­துள்­ளது. இது எமது கொள்­கை­க­ளுக்கு வெற்றி என்றே கூற வேண்டும். அதா­வது எம்­முடன் சேர்ந்­தி­ருந்த சேர்ந்­தி­ருக்கும் கட்­சி­களின் வெற்­றிகள் ஒரு­பு­ற­மி­ருக்க இயக்­க­மான எமக்கும் கடந்த தேர்தல் சில உண்­மை­களைப் புலப்­ப­டுத்­தி­யுள்­ளது.

எமது கொள்­கையை பின்­பற்­று­கின்­றனர்

 ஏனெனில் தமிழ்த் தலை­மைத்­துவம் தாம் கூறு­வ­தையே மக்கள் என்­றும்போல் ஏற்­க­வேண்டும் என்று தேர்­தலின் போது கூறி­வந்­தது. எம்மைத் தீவிரப் போக்­கு­டை­ய­வர்கள் என்று போட்­டு­டைத்­தது. ஆனால் கணி­ச­மான அளவு மக்கள் அவர்கள் கருத்­துக்­களை நிரா­க­ரித்­தார்கள். இதன் பொருட்டு தமிழ்த் தலை­மை­களின் தற்­போ­தைய கருத்­துக்கள் முற்­றிலும் மாறி­வ­ரு­வதை நாம் காண்­கின்றோம். எம்மைத் தீவி­ர­போக்­கு­டை­ய­வர்கள் என்று குறை­கண்டு பிடித்­த­வர்கள் இப்­பொ­ழுது தாமும் அதே கொள்­கை­களை, கருத்­துக்­களை வெளிக்­கொ­ணர்ந்து கொண்­டி­ருக்­கின்­றனர். வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டும் என்­கின்­றார்கள், சுயாட்சி வேண்டும் என்­கின்­றார்கள்,தேசியம் பேசு­கின்­றார்கள், சமஷ்டி வேண்டும் என்­கின்­றார்கள். வீம்பில் பேசிய சிலர் தொடர்ந்து நாம் கூறி­வந்த கருத்­துக்­களை இப்­பொ­ழுது விடாப்­பி­டி­யாகப் பற்றிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள் போல் தெரி­கின்­றது. 

ஆனால் தமிழ் மக்கள் பேரவை கட்சித் தலை­மைத்­து­வங்­களின், தமிழ்த் தலை­மைத்­து­வங்­களின் எழுச்சி வீழ்ச்­சி­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­ஒரு இயக்கம் அல்ல. அதற்கு கட்சி ஒழுங்­க­மைப்பு இல்லை,ஆனால் நிர்­வாக ஒழுங்­க­மைப்பு உண்டு. கட்சி எதிர்­பார்ப்­புக்கள் இல்லை, ஆனால் தமிழ் மக்கள் அனை­வ­ரதும் எதிர்­பார்ப்­புக்­களும் எமது எதிர்­பார்ப்­புக்­களே. கட்­சி­களின் ஆத­ர­வா­ளர்கள் கட்­சி­யையே முதன்­மைப்­ப­டுத்­து­கின்­றார்கள். பேர­வையின் ஆத­ர­வா­ளர்கள் பல கட்­சி­க­ளையும் சேர்ந்­த­வர்கள். ஆனால் கொள்கை ரீதியில் ஒன்­று­பட்­ட­வர்கள். அவ்­வா­றான கொள்கை ரீதி­யான ஒற்­று­மையே இப்­பொ­ழுது முரண்டு பிடித்த எமது தமிழ்த் தலை­மை­க­ளையும் எம் மொழியைப் பேச­வைத்­துள்­ளன. ஆனால் அதற்­கான கார­ணங்கள் பல இருக்­கலாம். அர­சியல் ஆய்­வா­ளர்கள் அவற்றைக் கண்­டு­பி­டிப்­பார்கள் என்று நம்­பு­கின்றேன். தலை­மைகள் யதார்த்­தத்தை நோக்கிப் பய­ணிப்­பது வர­வேற்­கத்­தக்­கதே. 

தமிழ் மக்கள் பேரவை எம் மக்­களை ஒன்று சேர்ப்­பது, புரிந்­து­ணர்­வு­ட­னான அவர்­களின் குரல்­களை ஒலிக்கச் செய்­வது, தமிழ் மக்­களின் குற்றம் குறை­களை எடுத்­துக்­காட்டி எம்மை நாமே முன்­னேற்றிச் செல்­வது, அர­சியல் ரீதி­யாக எமது உரித்­துக்­களைப் பெறப் போரா­டு­வது, உலகத் தமிழ் மக்­க­ளி­டையே ஒற்­று­மையை உண்­டாக்­குதல் போன்ற பல குறிக்­கோள்­களை முன்­வைத்து மிக அமை­தி­யாக முன்­னேறி வரு­கின்­றது. 

அந்த வகையில் எமது இளை­ஞர்­களை ஒன்று சேர்க்கும் ஒரு பாரிய பொறுப்பு எம்மேல் சுமத்­தப்­பட்­டுள்­ளது. படித்த, பட்டம் பெற்ற, பல்­க­லைக்­க­ழ­கத்தில் பட்டம் பெறப் படித்துக் கொண்­டி­ருக்கும் இளைஞர் யுவ­தி­களும், படிப்பை இடை­நி­றுத்தி வேலை­க­ளுக்­காக அலைந்து திரியும் இளைஞர் யுவ­தி­களும், விவ­சாயம், மீன்­பிடி போன்ற தொழில்­களில் ஈடு­பட்­டி­ருக்கும் இளைஞர் யுவ­தி­களும் இன்னும் பல இள நெஞ்­சங்­களும் உங்கள் தமிழ் மக்கள் பேர­வைக்கு எப்­பேர்ப்­பட்ட ஆத­ரவை நாம் வழங்­கலாம் என்று கேட்டு வரு­கின்­றார்கள். சில மாதங்­க­ளுக்கு முன்னர் என்னை வட மாகாண சபையில் இருந்து வெளி­யேற்ற நட­வ­டிக்­கைகள் எடுத்த போது வந்து என்னைச் சந்­தித்து தமது ஆத­ரவை நல்­கிய பெரும்­பான்­மை­யான இளைஞர் குழாம்கள் எம்­மோடு இணைந்து பய­ணிக்க நாட்டம் கொண்­டுள்­ளனர். அவர்­களை ஒன்­றி­ணைக்க எனக்கு அவ­காசம் கிடைக்­க­வில்லை. எனினும் தொடர்ந்து அவர்கள் தமது கருத்­துக்­களை எனக்கு வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றார்கள்.

இளைஞர் அணி­களை உரு­வாக்க வேண்டும்

தற்­போது எமது இளைஞர் அணி­களை உரு­வாக்க தக்க தருணம் வந்­துள்­ளது. வட கிழக்கு மாகா­ணங்­களில் இளைஞர் அணி­களை ஒன்று சேர்க்­கவும் அவர்­க­ளுக்கு எமது தமிழ் மக்கள் பேர­வை­யூ­டாக போதிய அர­சியல் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தவும் வேண்­டி­யுள்­ளது. அதன் பொருட்டு எம்­மி­டையே போதிய கரி­சனை எடுக்­கப்­பட வேண்டும் என்று கேட்டுக் கொள்­கின்றேன். 

பெண்கள் மத்­தி­யிலும் இளைஞர் யுவ­திகள் மத்­தி­யிலும் நல்­லெண்­ணத்தைப் பெற்­றுள்ள மகளிர் விவ­கார அமைச்சர் திரு­மதி அனந்தி சசி­தரன் இங்கு வந்­துள்ளார். பெண்கள், இளைஞர், யுவ­திகள் சார்­பான அவரின் உதவி எமக்கு எப்­பொ­ழுதும் கிடைக்கும் என்ற நம்­பிக்கை எமக்­குண்டு.கல்­லூரி அதி­ப­ராகக் கட­மை­யாற்­றிய இளைஞர் யுவ­திகள் மத்­தியில் நல்­லெண்­ணத்தைப் பெற்­றுள்ள அருந்­த­வ­பாலன் இன்று இங்கு வந்­துள்­ளார்கள். அவர்கள் போன்­ற­வர்­களும் எமக்கு போதிய உத­வி­களை நல்­கலாம் என்று எதிர்­பார்க்­கின்றோம். 

பசுமை இயக்­கத்தில் ஊறி­யி­ருக்கும் முன்­னைய அமைச்சர் பொ.ஐங்­க­ர­நேசன்  இங்­கி­ருக்­கின்றார். வட கிழக்கு மாகா­ணங்கள் பல மரங்­க­ளையும் விருட்­சங்­க­ளையும் யுத்­தத்தின் போது இழந்து விட்­டன. உடனே இழந்த மரங்­க­ளுக்குப் பதி­லாக புதிய மரங்கள் நாட்டி ஒரு பசு­மைப்­பு­ரட்­சியை ஏற்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. அவரின் பசுமை இயக்கம் எம்­முடன் சேர்ந்து இந்தக் கைங்­க­ரி­யத்தில் ஈடு­பட வேண்டும் என்று எதிர்­பார்க்­கின்றோம். ஒழுங்­கு­ப­டுத்­து­வதில் அவரின் திறனை நான் அவ­தா­னித்­துள்ளேன். இளைஞர் யுவ­திகள் மத்­தி­யிலும் அவ­ருக்கு நல்­லெண்ணம் உண்டு.  அவரும் எமக்கு உத­வியாய் இருப்பார் என்று நம்­பு­கின்றோம். 

புதிய கலா­சாரம் உரு­வாக வேண்டும்

இன்­றைய சூழலில் எமது மக்­க­ளி­டையே புதி­ய­தொரு கலா­சா­ரத்தை உண்­டு­பண்ண வேண்­டிய ஒரு கடப்­பாடு எம்மைச் சார்ந்­துள்­ளது. கட்­சி­க­ளுக்கு அடி­மைப்­ப­டாது தமிழ் மக்கள் முன்­னேற்­றத்­தையே குறிக்­கோ­ளாகக் கொண்டு சேவையில் ஈடு­பட வேண்­டி­யுள்­ளது. இளைஞர் யுவ­தி­க­ளுக்கு ஆற்றல் அளிக்கும் செயற்­றிட்­டங்­களை உரு­வாக்க வேண்டும். உதா­ர­ணத்­திற்கு பல துறை­களில் தகை­மையும் திறனும் அடைய புலமைப் பரி­சில்­கள்­பல நாடு­களால் வழங்­கப்­ப­டு­கின்­றன. அவற்றை எம் மக்கள் பாவிக்க முன்­வ­ரலாம். அதற்­கான பூர்­வாங்க நட­வ­டிக்­கை­களை எமது பேரவை எடுக்­கலாம். உதா­ர­ணத்­திற்கு இந்­தியா தனது புல­மைப்­ப­ரி­சில்­களை எமது இளைஞர் யுவ­திகள் போதி­ய­வாறு பாவிப்­ப­தில்லை என்று அங்­க­லாய்க்­கின்­றது. இது பரி­சீ­லிக்­கப்­பட வேண்டும். 

இந்­தியா குறித்த முரண்­பா­டு­களை போக்க வேண்டும்

சில அர­சியல் கட்­சிகள் நாங்கள் இந்­தி­யா­வுடன் கிட்­டிய உறவைப் பேணு­வதை விரும்­பு­கின்­றார்கள் இல்லை. தமிழ் மக்­க­ளுக்கு போரின் கடைசி நாட்­களில் நடந்­த­வற்­றிற்கு இந்­தி­யாவும் பொறுப்பு என்ற முறையில் அவ்­வா­றான ஒரு எண்ணம் அவர்­க­ளுக்கு இருக்­கலாம். ஆனால் அன்­றைய நிலை வேறு. இன்­றைய நிலை வேறு.இந்­தி­யாவின் அனு­ச­ரணை இல்­லாமல் வட கிழக்குத் தமிழ் மக்கள் தமது நியா­ய­மான குறிக்­கோள்­களை அடைய முடி­யாது என்ற எண்ணம் கொண்­ட­வர்­களும் எம்முள் இருக்­கின்­றார்கள்.ஆகவே எம்­மி­டையே இது பற்­றிய கருத்து வேறு­பா­டு­களை முடிந்­த­ளவு நீக்­கு­வது அவ­சி­ய­மா­கின்­றது. எல்லா விட­யங்­க­ளிலும் எம்­மி­டையே கருத்­தொ­ரு­மிப்பு ஏற்­பட முடி­யாது. ஆனால் ஒருவர் ஒரு­வர்க்­கான கருத்­துக்­களைப் புரிந்து கொண்டு முன்­னே­றலாம். 

எமது தமிழ் மக்கள் பேரவை அர­சியல் கட்­சி­யாக மாறுமா என்ற கேள்வி மேலும் மேலும் எம்­மிடம் கேட்­கப்­ப­டு­கி­றது. ஒரு மக்கள் இயக்கம் கட்சிக் கட்­டுக்­கோப்­புக்­களில் சில­வற்றைப் பின்­பற்­றலாம். ஆனால் கட்­சி­யாக மாறி­விடக் கூடாது. அத­னால்த்தான் நாங்கள் சென்ற தேர்­தலின் போது எமது கொள்­கை­களை, நோக்­கு­களைக் கட்­சிகள் வெளிக்­காட்­டு­வதை வர­வேற்றோம். ஆனால் நாங்கள் அவர்­க­ளுடன் சேர முன்­வ­ர­வில்லை. மக்கள் இயக்­கத்தைக் கட்­சிகள் ஆத­ரிக்­கலாம். கட்­சி­களை மக்கள் இயக்கம் ஆத­ரித்தால் அது மக்கள் இயக்­க­மாக இருக்க இலா­யக்­கற்­ற­தா­கி­விடும். ஒவ்­வொரு கட்­சிக்கும் ஏதோ ஒரு அடை­யாளம் உண்டு. வர­லாறு உண்டு. மக்­க­ளி­டையே மக்கள் இயக்­கத்­திற்கு இருக்கும் அடை­யாளம் வேறு. நாம் கட்சி பேதங்­க­ளுக்கு அப்­பாற்­பட்­ட­வர்கள். மக்­க­ளுடன் நேர­டி­யாகத் தொடர்பை ஏற்­ப­டுத்த விரும்­பு­ப­வர்கள். மக்­களின் சேவை­யொன்றே எமது இயக்­கத்தின் குறிக்கோள். எந்த நன்­மை­க­ளையும் எமது இயக்கம் எவ­ரி­டமும் எதிர்­பார்க்­காது. ஆனால் எம்மைத் திறம்­பட நடத்த எம் மக்கள் தரும் கொடை­களே எம்மை வழி­ந­டத்­து­வன. 

செயற்­குழு அமைக்­கப்­பட வேண்டும்

இந்த அடிப்­ப­டையில் நாங்கள் மத்­திய குழு­வாக இங்கு இன்று கூடி­யி­ருக்கும் அதே வேளையில் எமது குறிக்­கோள்­களை நெறிப்­ப­டுத்தும் போது கட்சி அர­சியல் சார்­பற்ற ஒரு சிலரை செயற்­கு­ழு­வாக நிய­மித்து அவர்கள் ஊடாக தீர்­மா­னங்­களை எடுத்தால் நல்­லது என்று அபிப்­பி­ரா­யப்­ப­டு­கின்றோம். மத்­திய குழு இன்­றி­ருப்­பது போல் தொடர்ந்து இருக்கும். இன்று வந்­தி­ருக்கும் மூவ­ரையும் உங்­க­ளுக்கு ஆட்­சே­பனை இல்லை என்றால் மத்­திய குழு­வினுள் உள்­ள­டக்­கலாம். எமது மத்­திய குழு முன்­போல காலத்­திற்கு காலம் கூடும். ஆனால் எங்­களுள் இருந்து ஒரு சிலரை செயற்­கு­ழு­வுக்கு நிய­மிக்க உத்­தே­சித்­துள்ளோம். இந்தக் குறைந்த தொகை­யினர் வேண்­டும்­போது மாதா­மாதம் கூடலாம். மத்­திய குழு அங்­கத்­த­வர்கள் வேண்­டும்­போது தமது அறி­வு­ரை­களை எமக்கு வழங்­கலாம். ஆனால் இறுதித் தீர்­மா­னங்கள் இந்த செயற்­கு­ழு­வையே சாரும். நிர்­வாகத் திறன் கரு­தியும், குறைந்தோர் கூடிய கெதியில் கூட முடியும், தீர்­மா­னங்­களை எடுக்க முடியும் என்ற கார­ணத்­தாலும், தீர்­மா­னங்­களைக் கட்சி அர­சியல் சார்ந்து எடுக்­காமல் இயக்­கத்தின் குறிக்­கோள்­களை மைய­மாக வைத்து எடுக்­கவும் இந்த வழி­முறை பல­ன­ளிக்கும் என்று எண்­ணு­கின்றோம். 

கட்சி அர­சியல் வேறு, அர­சி­யலில் நாட்டம் வேறு. முடிந்த வரையில் அர­சி­யலில் நாட்­டமும் கட்சி அர­சி­யலில் வெகு­வாக ஈடு­ப­டா­தி­ருப்­ப­வர்­க­ளையே செயற்­கு­ழுவில் நிய­மிக்கக் கரு­தி­யுள்ளோம். 

எமது தேர்வு பின்­வ­ரு­வோரை உள்­ள­டக்­கி­யுள்­ளது. எங்­களுள் 11 பேரை அடை­யாளங் கண்­டுள்ளோம். தேர்­தல்­க­ளு­டனும் கட்சி அர­சி­ய­லு­டனும் வெகு­வாக இணைந்த எமது சகோ­தர சகோ­த­ரி­களை நாம் செயற்­கு­ழு­விற்குள் சேர்க்­க­வில்லை. 

பின்­வ­ருவோர் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்கள். 

வைத்­திய கலா­நிதி லக் ஷ்மன், வைத்­திய கலா­நிதி சிவன்­சுதன், பேரா­சி­ரியர் சிற்­றம்­பலம், பேரா­சி­ரியர் சிவ­நாதன், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி புவி­தரன், கல்­லூரி அதி­பரும் ஊட­க­வி­ய­ளா­ள­ரு­மான விஜ­ய­சுந்­தரம், வணக்­கத்­திற்­கு­ரிய ஜெய­பாலன் குரூஸ், ஜனார்த்­தனன், வசந்­த­ராஜா, வைத்­திய கலா­நிதி கரு­ணா­கரன் இவர்­க­ளுடன் நானும் சேர்ந்­து­கொள்வேன்.எல்­லா­மாகப் பதி­னொரு பேர். 

எங்கள் ஏற்­பாட்டை எமது மத்­திய குழு ஏற்றால் செயற்­கு­ழுவை இன்றே நிய­மித்து வேலை­களைத் தொடங்கலாம். எமது முதல் வேலையாக 18 ஆம் திகதி காலை 10 மணிக்கு திருகோணமலையில் பொதுமக்களுக்கு அரசியல் ஞானம் புகட்டும் கூட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தவுள்ளோம்.  ஏற்கனவே  பேச்சாளர்களை அடையாளப்படுத்தியுள்ளோம்.  யோதிலிங்கம் இணைப்பாட்சி பற்றியும்,சிரேஷ்ட விரவுரையாளர் மு.வு.கணேசலிங்கம்  வட கிழக்கு இணைப்பு பற்றியும், சிரேஷ்ட சட்டத்தரணி இரத்னவேல் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை பற்றிய பிரேரணை பற்றியும் பேச இருக்கின்றார்கள். எமது மக்களை ஒன்றிணைத்து அந்தக் கூட்டத்திற்கு கொண்டுவர நீங்கள் ஒவ்வொருவரும் உதவ வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் கூட்டத்திற்கு வருவீர்கள் என்றும் எதிர்பார்க்கின்றோம். 

தமிழ் மக்கள் பேரவை தொடர்ந்து எம் மக்களின் விமோசனத்தில் கரிசனை காட்ட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் ஒவ்வொருவரும் தாங்கள் மக்கள் சேவையில் எவ்வாறு இறங்க முடியும் என்று எமக்குத் தெரியப்படுத்தினால் நல்லது. உதாரணமாக எமது வைத்தியர்கள் ஒரு  நாள் இலவச வைத்திய முகாம் ஒன்றை நடத்த நடவடிக்கைகள் எடுக்கலாம். நாங்கள் வெறுமனே அரசியல் பேசுவதால் மக்களுக்கு நன்மை ஏற்படாது. அரசியல் ஞானமும் பொருளாதார நன்மைகளையும் அவர்கள் பெற வேண்டும். இதற்காக நாங்கள் ஒவ்வொருவரும் பாடுபடுட வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22