அநுராதபுரம் - தம்புத்தேகம நகர குழப்ப நிலை காரணமாக இராஜாங்கனை குடிநீர் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் இருந்து  நீரைப் பெற்றுக்கொண்டு   முன் னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள குடி நீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள்  தம்புத்தேகம  நகரில் நேற்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் கலகமாக மாறியதில் கைது செய்யப்பட்ட 59 பேரில் 50 பேர் எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.