விமானத்தில் தவறாக ஏறிவிட்டதாக நினைத்து அவசர கால ஜன்னல் வழியாக இளைஞர் ஒருவர் வெளியே குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

அமெரிக்காவின் நிவ்யோர்க்கில் யுனைட்டட் ஏர்லைன்ஸ் என்ற விமானத்தில் 25 வயதான நபரொருவர் விமனத்தில் உள்ளே சென்ற பிறகு சந்தேகமடைந்து இது நான் செல்ல வேண்டிய விமானம் இல்லை என்றும் தன்னை இறக்கிவிடும்படியும் கூறியுள்ளார்.

ஆனால் விமான அதிகரிகள் அவரது பேச்சை கேட்காத காரணத்தினால் அவசர கால ஜன்னலை திறந்து விமானத்தின் இறக்கை மீது குதித்துள்ளார். இதனால் இறக்கை மீது ஊற்றப்பட்ட சுடு நீரால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து குறித்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் அவரது விமான பயணிச்சீட்டு படி அவர் சரியான விமானத்தில்தான் ஏறியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்