அமெரிக்காவில் 90 வயதை கடந்தவர்களிடம் நடத்திய ஆய்வில் அளவில் குறைவாக மது அருந்துவதும் நீண்ட ஆயுளுக்கான காரணங்களில் ஒன்றாக கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வு குழுவினர் கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து 90 வயதை கடந்தும் வாழ்ந்துவரும் 1,700 பேரின் பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை மிகவும் நெருக்கமாகவும், துல்லியமாகவும் கண்காணித்து ஆய்வு செய்து வந்தனர்.

இவர்களில் நாளொன்றுக்கு 2 கோப்பைகளுக்கு கூடாமல்  வயின் அல்லது அல்கஹோல் அடங்கிய இதர மது வகைகளை மிதமாக குடித்து வந்தவர்களின் மரண விகிதம் சுமார் 18% அளவுக்கு குறைத்துள்ளதாக இந்த ஆய்வு குழுவின் தலைவரும் நரம்பியல் நிபுணருமான கிளாடியா காவாஸ் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க மருத்துவ அறிவியல் துறை மேம்பாடு தொடர்பாக சமீபத்தில் நடந்த ஆண்டாந்திர கூட்டத்தில் "90+ Study" என்னும் இந்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.