வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பிணையில் விடுதலை !

Published By: Robert

28 Feb, 2018 | 01:44 PM
image

வடக்கு மாகாணசபையின் முல்லைத்தீவு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்றையதினம் முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் பொது மக்களின் காணிகளை பலவந்தமாக கையகப்படுத்தி கடந்த 9 வருடங்களாக கோட்டாபய கடற்படை முகாம் என்ற பெயரில் பாரிய கடற்படைத் தளமொன்றை அமைத்துள்ள ஸ்ரீலங்கா கடற்படையினருக்காக நிரந்தரமாக காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் கடந்த 22 ஆம் திகதி நில அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்;து மக்களோடு இணைந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமைக்காக மாகாணசபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் ரவிகரன் ஆகியோர் பொலிஸாரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

கடந்த 22 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுக்கு ஆதரவாக வடமாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன்,எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் இணைந்துகொண்டிருந்தனர்.

போராட்டத்தின் போது கடமையில் இருந்த அரச ஊழியர்களின் பணிக்கு இடையூறுவிளைவித்தமை, அரச வாகனம் சேதப்படுத்தியமை,போக்குவரத்தை தடைசெய்தமை தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக முல்லைத்தீவு பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கபட்டிருந்தது.

இதற்காக வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை 27 ஆம் திகதியான நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் தனது சட்டத்தரணி ஊடாக எதிர்வரும் 06 ஆம் திகதி வரை முன்பிணை வாங்கியுள்ளார்.

இந்த நிலையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு வடமாகாண சபை உறுப்பினரான துரைராசா ரவிகரனை இன்று காலை 8.00 மணிக்கு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்றையதினம் அவரை கைதுசெய்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைகள் நடைபெற்ற நிலையில் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் சார்பாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த சட்டத்தரணிகள் அனைவரும் வாதாடியிருந்தனர். இதன்போது வழக்கை விசாரித்த நீதவான் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி ஒத்தி வைத்ததோடு மாகாணசபை உறுப்பினர் ரவிகாரனை பிணையில் செல்லவும் அனுமதித்தார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் ரவிகரன்,

நான் போராட்டத்தை மேற்கொண்டது மக்களின் உரித்துடைய நிலங்களை கையகப்படுத்தி கடற்படை முகாம் அமைத்துள்ள கடற்படையினருக்கு எதிராகவே முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு வகையான போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளேன். மக்களின் நிலங்களை அபகரித்துள்ள கடற்படை அந்த நிலங்களை விடுவிக்கவேண்டும். இதற்காக தொடர்ந்து எனது பணி தொடரும் இவ்வாறான கைதுகளால் மனம் தளரமாட்டேன் தொடர்ந்தும் எம் மக்களுக்காக குரல்கொடுப்பேன் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57