சிரிய மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறு ஐ.நா சபையிடம் கோரிக்கை.!

Published By: Robert

28 Feb, 2018 | 01:07 PM
image

சிரியாவில் இடம்பெற்று வருகின்ற மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை செயலகம் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி உலக நாடுகளின் உதவியுடன் முன்மொழியப்பட்டுள்ள யுத்த நிறுத்த முயற்சிகளை யதார்த்தமாக்குமாறும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஐ.நா. செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி நினா பிராண்ட்ஸ்ட்ராபுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 

ஐ.நாவின் செயலாளர் நாயகம் ‘சிரியா உலகத்தின் ஒரு நரகம்’ என்று குறிப்பிடுகின்ற அளவிற்கு மிக மோசமாக அப்பாவி பொது மக்கள் அங்கு கொலை செய்யப்படுகின்றனர். விசேடமாக சிறுவர்களும், பெண்களும் படுகொலை செய்யப்படுகின்றனர். 

இதற்குப் பொறுப்பான அனைத்துத் தரப்புக்களும் உடனடியாக யுத்த நிறுத்தத்தில் ஈடுபட்டு மேலும் மனிதப் படுகொலைகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், ஐ.நா. சபை முழுமையாக இதனை ஒரு மிக முக்கிய - அவசர விடயமாக கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெற்றவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:47:42
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28