இயேசுவின் கல்லறை உள்ள பழங்கால தேவாலயம் மூன்று நாள் ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

ஜெருசலேமில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயத்தில்தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்து, பின் புத்துயிர் பெற்றதாகவும் தேவாலயம் ஒரு புனித தலமாகவும் கிறிஸ்தவர்களால் கருதப்படுகிறது.

இஸ்ரேலிய அரசின் புதிய சொத்து வரி மற்றும் வரி விதிப்பு கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்  தேவாலய நிர்வாகத்தின் சார்பில் மூன்று தினங்களாக மூடப்பட்டிருந்த புனித தலமான செபுல்ஜெரி தேவாலயம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

தேவாலயத்தின் காவலர்களாக செயல்படும் இரண்டு நபர்கள் மூலம் காலை 4 மணி அளவில் அதன் வாயிற் கதவுகள் திறக்கப்பட்டது.  ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த போரட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.