அம்பாறையில் இடம்பெற்றது என்ன ? முழுமையான விபரங்கள் இதோ !

Published By: Priyatharshan

28 Feb, 2018 | 10:50 AM
image

அம்­பா­றையில் பள்­ளி­வாசல் மற்றும் முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மீது பெரும்­பான்­மை­யின குழு­வினர் தாக்­குதல் நடத்­தி­ய­துடன் வாக­னங்­க­ளையும் தீக்­கி­ரை­யாக்­கி­யுள்­ளனர். இதனால் அம்­பாறை நகர பகு­தியில் பெரும் பதற்றம் ஏற்­பட்­டுள்­ளது. 

அம்­பாறை - டி.எஸ்.சேன­நா­யக்க வீதியில் உள்ள ஜும் ஆப்பள்­ளி­வாசல், பள்­ளி­வாசல் காரி­யா­லயம், தங்­கு­மிடம், அதனை அண்­மித்து அமையப் பெற்­றுள்ள முஸ்லிம் வர்த்­த­கர்­க­ளுக்கு சொந்­த­மான மூன்று உண­வ­கங்கள், ஒரு பல­ச­ரக்குக் கடை ஆகி­ய­வற்றின் மீதே பெரும்­பான்மை இனக் குழு­வொன்று தாக்­குதல் நடத்­தி­யுள்­ள­துடன் அங்­கி­ருந்த முஸ்­லிம்கள் மீதும் தாக்­குதல் நடாத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த சம்­ப­வத்­தினால் அம்­பாறை நகரில் நேற்று முன்­தினம் நள்­ளி­ரவு முதல் நேற்று காலை வரை பெரும் பதற்­ற­மான சூழல் நில­வி­ய­துடன், பொலிஸ் விசேட அதி­ரடிப் படை­யினர் மற்றும் மேல­திக பொலிஸ் படை­ய­ணி­யி­னரின் பாது­காப்­புடன் நிலைமை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

 எனினும் கல­வரம் ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் இருப்­பதால் நேற்றும் முழு­மை­யாக பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரின் பாது­காப்பு அம்­பாறை நக­ருக்கு அளிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், குறித்த தாக்­குதல் தொடர்பில் விசேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர கேச­ரி­யிடம் தெரி­வித்தார்.

' நிலை­மையை நாம் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­துள்ளோம். தற்­போது பொலிஸ் விசேட அதி­ரடிப் படை­யினர் பாது­காப்பு கட­மை­களில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். தேவை ஏற்­ப­டு­மாயின் இரா­ணு­வத்தை அழைக்­கவும் தயங்­க­மாட்டோம். இந்த தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், பிர­தே­சத்தின் சி.சி.ரி.வி. காணொ­ளிகள் ஊடாக சந்­தேக நபர்­களை அடை­யாளம் காணும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன என்றும் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர மேலும் தெரி­வித்தார்.

 நடந்­தது என்ன?

நேற்று முன் தினம் இரவு 10.30 மணி­ய­ளவில் அம்­பாறை, டி.எஸ்.சேன­நா­யக்க வீதியில் அமைந்­துள்ள நியூ காசிம் உண­வ­கத்­துக்கு சில பெரும்­பா­ன்மை இன இளை­ஞர்கள் சாப்­பி­டு­வ­தற்­காக சென்­றுள்­ளனர். இதன்­போது அவர்கள் சாப்­பிட கொத்து ரொட்டி, பராட்டா கோரி­யுள்ள நிலையில் அவை தயார் செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்கு கொடுக்­கப்­பட்­டுள்­ளன. இதன்­போது பரி­மா­றப்­பட்ட உணவில் வெள்ளை நிறத்தில் ஏதோ இருந்­தமை தொடர்பில் சுட்­டிக்­காட்டி, கருத்­தடை அல்­லது இன விருத்­தியை தடுக்கும் வண்­ண­மான பதார்த்தம் கொத்து ரொட்­டியில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தாக கூறி அந்த இளை­ஞர்கள் குழு கடும் வாக்கு வாதத்தில் ஈடு­பட்­டுள்­ளது.

இத­னை­ய­டுத்து அந்த குழு­வினர் உண­வ­கத்தின் காசாளர் கதி­ரையில் இருந்த இளை­ஞ­ருடன் இது தொடர்பில் கடும் தொனியில் வாக்கு வாதப்­பட்டு, அவர் பேசு­வதை வீடி­யோவும் எடுத்­துள்­ளனர்.

கருத் தடை மருந்து போட்­டீர்­களா?

இதன்­போது அந்த இளைஞர் குழு, நீங்கள் உண­வுக்கு கருத்­தடை மாத்­திரை போடு­கின்­றீர்கள் தானே என தொடர்ச்­சி­யாக உரத்த குரலில் கேட்­ட­போது அதற்கு காசாளர் முதலில் இல்லை என்றும் பின்னர் அச்­சு­றுத்தும் பாணியில் கேட்­கப்­படும் போது ஆம் எனவும் பதி­ல­ளிக்கும் வீடியோ பதிவு செய்­யப்­பட்டு அது சமூக வலை­த்­த­ளங்­க­ளிலும் பரப்­பப்பட்­டுள்­ளன. எனினும் தன்னை கட்­டா­யப்­ப­டுத்­தியே, சிங்­கள மொழி சரி­யாக தெரி­யாத நிலையில் அந்த வீடி­யோவை அவர்கள் எடுத்­துள்­ள­தாக காசாளர் தரப்­பினர் தெரி­வித்­துள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது

பஸ்­ஸிலும், மோட்டார் சைக்­கி­ளிலும் வந்த குழு­வினர்

 இந் நிலையில் நள்­ளி­ரவு 12.00 மணி அளவில் பஸ் வண்­டி­யொன்­றிலும், 50 வரை­யி­லான மோட்டார் சைக்­கிள்­க­ளிலும் பெரும்­பா­ன்மை இன குழு­வினர் குறித்த உண­வகம் அமைந்­துள்ள இடத்­துக்கு வந்­துள்­ளனர். அங்கு வந்­த­வர்கள் அரா­ஜ­க­மான முறையில் நடந்­து­கொண்­டுள்­ள­துடன் உண­வகம் மீது தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர்.

பள்­ளி­வாசல், முஸ்­லிம்கள் மீதான தாக்­குதல்:

இந் நிலையில் அந்த உண­வகம் மீது மட்­டு­மல்­லாமல் அப்­ப­கு­தியில் அமைந்­துள்ள மேலும் இரு உண­வ­கங்கள், பல­ச­ரக்கு கடை ஆகி­ய­வற்றின் மீதும் தாக்­குதல் நடாத்­தி­யுள்ள அந்த குழு­வினர் அத­னுடன் நிற்­காது பள்­ளி­வாசல் மீதும் அத்து மீறி­யுள்­ளனர்.

முதலில் பள்­ளி­வாசல் மதிலை முற்­றாக உடைந்­தெ­றிந்­துள்ள அவர்கள், பின்னர் பள்­ளி­வா­சலின் கண்­ணா­டிகள், ஜன்னல், கத­வு­களை உடைத்­துக்­கொண்டு பள்­ளி­வா­ச­லுக்கு சேதம் விளை­வித்­துள்­ள­துடன் அங்­கி­ருந்த புனித அல் குர் ஆன் பிர­திகள் உட்­பட சமய நூல்­களை தீயிட்டு எரித்­துள்­ளனர். அத்­துடன் பள்­ளி­வா­ச­லுடன் இணைந்­த­தாக அமைந்­துள்ள பள்­ளி­வாசல் நிர்­வாக காரி­யா­ல­யத்­தையும் அடித்­து­டைத்து, பள்­ளி­வாசல் வளா­கத்தில் அமைந்­துள்ள தங்­கு­மி­டங்­களில் தங்­கி­யிருந்­த­வர்கள் மீது தாக்­குதல் நடாத்தி அந்த கட்­டி­டங்­க­ளையும் சேதப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

இதன்­போது அந்த தங்­கு­மி­டங்­களில் தங்­கி­யி­ருந்­த­வர்கள் அங்­கி­ருந்து தப்பி பின்னால் உள்ள காட்­டுப்­ப­கு­திக்கும் ஏனைய பாது­காப்­பான இடங்­க­ளுக்கும் ஓடி தப்­பித்­துக்­கொண்­ட­தாக சம்­ப­வத்­துக்கு முகம் கொடுத்த நபர் ஒருவர் தெரி­வித்தார்.

தாம­த­மாக வந்த பொலிஸார்

இந்த வன்­மு­றைகள் இவ்­வாறு நடந்­தேறும் போது, பள்­ளி­வா­சலில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் இருந்த பொலிஸ் நிலைய அதி­கா­ரிகள்  ஸ்தலத்­திற்கு வர­வில்லை எனவும் அவர்கள் தாக்­கு­தல்­களும் சேதப்­ப­டுத்­தல்­களும் நிறை­வ­டைந்த பின்னர் ஸ்தலத்­திற்கு வந்­த­தா­கவும்  சம்­ப­வத்­துக்கு முகம்­கொ­டுத்த மக்கள் குற்றம் சாட்­டு­கின்­றனர்.

சுமார் 3 நிமி­டங்­களில் சம்­பவ இடத்தை வந்­த­டைய கூடி­ய­தாக இருந்த போதிலும் தாக்­குதல் ஆரம்­பித்து ஒன்­றரை மணி நேரத்தின் பின்­னரே பொலிஸார் ஸ்தலத்­திற்கு வந்­த­தாக அவர்கள் கூறு­கின்­றனர்

இது தொடர்பில் பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சகர் ருவன் குண­சே­க­ர­விடம் வின­விய போது, அது குறித்து கேசரி கேட்கும் வரை தான் அறிந்­தி­ருக்­க­வில்லை எனவும், அவ்­வா­றான முறைப்­பா­டுகள் இருப்பின் விரி­வான விசா­ர­ணைகள் நடை­பெறும் என்றும் அவர் கூறினார்.

சேத­மாக்­கப்­பட்ட வாக­னங்கள்:

இந்த வன்­மு­றை­களின் போது பள்­ளி­வாசல் வளா­கத்தில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த  முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மா­னது எனக் கூறப்­படும்  வேன், லொறிகள் இரண்டு, 3 மோட்டார் சைக்­கிள்கள் உள்­ளிட்ட வாக­னங்கள் அடித்தும் தீவைத்தும் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இதில் வேனும் மோட்டார் சைக்­கிள்­களும் முற்­றாக எரிந்து நாச­மா­கி­யுள்­ளன.

பலப்­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்பு கட்­ட­மைப்பும், ஆரம்­பிக்­கப்­பட்ட விசா­ர­ணை­களும்

இந் நிலையில் ஸ்தலத்­திற்கு சென்­றுள்ள பொலிஸார் முதலில் பிர­தே­சத்தின் அமை­தியை உறு­திப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.  இதன்­போது பொலிஸ் விசேட அதி­ரடிப் படை­யி­னரும் சம்­பவ இடத்­துக்கு அழைக்­கப்­பட்­டுள்­ளனர். நகரப் பகுதி முற்று முழு­தாக விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரின் கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது.

நேற்­றைய தினமே வாக்கு மூலங்­களை பதிவு செய்யும் நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்த பொலிஸார், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜய­சே­க­ரவின் உத்­த­ர­வுக்கு அமை­வாக அம்­பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.என்.ஜே.வெத­சிங்­கவின் மேற்­பார்­வையில் அம்­பாறை பொலிஸ் அத்­தி­யட்­சகர்  சமந்த டீ விஜே­சே­க­ரவின் நேரடி கட்­டுப்­பாட்டில் விசேட விசா­ர­ணைகளை ஆரம்­பித்­துள்­ளனர்.

இந்த விசா­ர­ணை­களில் அம்­பாறை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதி­கா­ரி­களும் அம்­பாறை பொலிஸ் நிலைய அதி­கா­ரி­களும் இணைக்­கப்­பட்­டுள்ள நிலையில், சி.சி.ரி.வி. காணொ­ளி­களை ஆராயும் நட­வ­டிக்­கைகள் நேற்று இரவு முதல் ஆரம்­ப­மா­னது.

ஸ்தலம் விரைந்த முஸ்லிம் பிர­தா­னி­களும் எதிர்ப்பு வெளி­யிட்ட பெரும்­பா­ன்மை மக்­களும்

 இந்த சம்­பவம் தொடர்­பி­லான விப­ரங்கள் பர­விய நிலையில், அம்­பாறை மாவட்­டத்தை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் பள்­ளி­வாசல் வளா­கத்­துக்கு நேற்று காலை­யி­லேயே விஜயம் செய்­தனர். விளை­யாட்­டுத்­துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பிர­தி­ய­மைச்சர் பைசல் காசிம், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நஸீர் உள்­ளிட்டோர் அங்கு சென்று நிலை­மை­களை ஆராய்ந்­தனர்.

பிர­தி­ய­மைச்சர் ஹரீஸ், பள்­ளி­வாசல் அருகே சென்ற போது, பள்­ளி­வா­ச­லுக்கு முன்­பாக உள்ள பாதையில் கூடி­யி­ருந்த பெரும்­பா­ன­்மை­யினர் அவ­ருக்கு பாரிய எதிர்ப்பை வெளி­யிட்­டனர். அங்கு அவர் கருத்துக் கூறக் கூடாது என அவர்கள் கூறி­ய­துடன் அவர் அங்கிருந்து வெளி­யேறும் வரை அங்கு பதற்­ற­மான சூழல் ஒன்­றினை உரு­வாக்கும் வித­மாக கோஷங்­களை எழுப்­பினர்.

சமா­தானக்கூட்டம்

இந் நிலையில் இந்த சம்­பவம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்று அம்­பாறை மாவட்ட செய­லாளர் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. மாவட்ட செய­லாளர் துசித் பீ வணி­க­சூ­ரி­யவின் தலை­மையில், சமா­தான கூட்­ட­மாக இந்த கூட்டம் இடம்­பெற்­றது. எனினும் குறித்த கூட்டம் தொடர்பில் செய்தி சேக­ரிக்க ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டது.

 அந்த கூட்­டத்தில் கிழக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜய­சே­கர, மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வெத­சிங்க, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர்  சமந்த டி விஜே­சே­கர, பிர­தி­ய­மைச்­சர்­க­ளான ஹரீஸ், பைசல் காசிம், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஐ.எம்.மன்சூர், நஸீர் உள்­ளிட்­டோ­ருடன் முஸ்லிம் சமூக ஆர்­வ­லர்கள் சிலரும் கலந்­து­கொண்­டனர். 

பெரும்­பான்­மை­யினர் தரப்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விம­ல­வீர திஸா­நா­யக்க, பிர­தே­சத்தின் பிக்­குகள் உள்­ளிட்டோர் பங்­கேற்­றனர்

சம்­ப­வத்­துக்கு கண்­டிப்பும், சந்­தேக நபர்­களை கைது செய்ய வேண்டாம் என்ற கோரிக்­கையும்

 இதன்­போது கூட்­டத்தில்  கருத்­துக்­களை முன்­வைத்­துள்ள பிக்­குகள், பள்­ளி­வாசல் மீதான தாக்­கு­தலை வன்­மை­யாக கண்­டித்­துள்­ளனர். எனினும் சம்­பவம் இடம்­பெற்று முடிந்­துள்ள நிலையில் அதனை தொடர இட­ம­ளிக்­காது  அமை­தியை ஏற்­ப­டுத்தும் வித­மாக எவ­ரையும் கைது செய்­யாது சுமு­க­மாக பிரச்­சி­னையை தீர்த்­துக்­கொள்வோம் என கூறி­யுள்­ளனர்.

 பிர­தி­ய­மைச்சர் ஹரீஸ் எதிர்ப்பு:

எனினும் இதன்­போது பிர­தி­ய­மைச்சர் ஹரீஸும் ஏனைய முஸ்லிம் பிர­தி­நி­தி­களும் பிக்­கு­களின் கோரிக்­கைக்கு எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளனர்.

 இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம்­பெற்று முடிந்­த­வுடன், சுமுக தீர்­வுக்­காக குற்­ற­வா­ளி­களை தப்­பிக்கச் செய்ய முடி­யாது எனவும், உடன் சட்ட நட­வ­டிக்கை அவ­சியம் எனவும், எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை கட்­டுப்­ப­டுத்­தவே கலந்­து­ரை­யா­டல்கள் வேண்டும் எனவும் அவர்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

 கைது செய்­வ­தாக உறுதி

இதன்­போது, சந்­தேக நபர்­களை சட்­டத்தின் முன் நிறுத்த வேண்­டி­யது தமது கடமை என ஒப்­புக்­கொண்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜய­சே­கர, சந்­தேக நபர்­களை கைது செய்­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்ளார்.

அம்­பாறை நகரில் இருந்து முஸ்­லிம்கள் இடம்­பெ­யர்வு:

அம்­பாறை நகரில் இடம்­பெற்ற இந்த வன்­முறை சம்­ப­வங்கள் கார­ண­மாக அம்­பாறை நகரில் தங்கி தொழில் செய்­து­வந்­த­வர்­களும் நகர பகு­தியில் வசித்த முஸ்லிம் குடும்­பங்கள் பலவும் அங்­கி­ருந்து தற்­கா­லி­க­மாக பாது­காப்பு கருதி இடம்­பெ­யர்ந்­துள்­ள­தாக பிர­தி­ய­மைச்சர் ஹரீஸ் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

 நிலைமை கட்­டுப்­ப­ாட­்டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்டு அமைதி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள போதும், எந்த நேரத்­திலும் கல­வரம் ஒன்று ஏற்­பட வாய்ப்­புள்­ள­தா­கவும் அவர் இதன்­போது கூறினார்.

 நிரந்­தர இன­வி­ருத்­தியை தடை செய்ய முடி­யாது;  மருத்­து­வர்கள்:

இதனிடையே,  ஒருவரை நிரந்தரமாக இனவிருத்தியை தடை செய்யும் விதமாகவோ அல்லது கருத்தடை ஏற்படுத்தும் விதமாகவோ எவ்வித இரசாயனங்களும் இதுவரை உலகில் கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் உணவிலும், உடைகளிலும் அவ்வாறான இரசாயனங்கள் சேர்க்கப்படுவதாக கூறப்படும் கருத்துக்கள் இனவாத சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டவை எனவும் உணவு, உடையில் கலந்து கருத்தடை, இன விருத்தி இல்லாமல் செய்யப்பட்டமை தொடர்பில் உலகில் இதுவரை எந்த சம்பவமும் பதிவாகவில்லை எனவும் விசேட வைத்திய நிபுணர் ஆரியசேன யூ.கமகே தெரிவித்தார்.

பின்னணி தொடர்பில் சந்தேகிக்கத்தக்க சம்பவம்:

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தொடர்பு பட்டிருக்கலாம் என சந்தேகிக்கத்தக்க சம்பவம் ஒன்று குறித்தும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் ஒரு கட்சியால்  பள்ளிவாசல் மதிலில் போஸ்டர் ஒன்று ஒட்டப் பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் அது ஒரு முஸ்லிம் இளைஞரால் கிழித்தெறி யப்பட்ட சம்பவத்தை மையப் படுத்தி பள்ளிவாசல் மதில்  உடைக்கப்பட்டதா என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.

எம்.எப்.எம்.பஸீர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22