காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்து வரும் கடும் பனிப்பொழிவு  காரணமாக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் மூடப்பட்டுள்ளது. 

மாநிலத்தில் கடந்த பத்து நாட்களாக பொழிந்துவரும் தொடர்பனியால் தலைநகர் ஸ்ரீநகரில் சாலைகள் பனியில் முற்றாக மூடப்பட்டும் வீடுகளின் கூரைகள், மரங்கள் வெள்ளை போர்வையை போர்த்தியது போல் பனிப்பொழிவால் மூடிக்கிடக்கின்றன. 

இதே காரணத்தால் 434 கிலோமீட்டர் நீளமுள்ள ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலை கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.