இரண்டு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதியாக தொழில் செய்யும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து இரண்டு கிலோகிராமும் 48 கிராமும் நிறையுடைய ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் பொலிஸார் தெரியவருவதாவது,

சந்தேக நபர் கஞ்சாவை பஸ் வண்டியில் கொண்டு வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து பன்னலையிலிருந்து வந்த பஸ் வண்டியை கந்தானை தெல்கஸ் சந்தியில் வைத்து பொலிஸார் நிறுத்தி சோதனை செய்த போது கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை நீதிமனறத்தில் ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.