இங்­கி­லாந்தில் வெற்றி பெற்ற குத்துச் சண்டை வீரர் திடீ­ரென மயங்கி விழுந்து உயி­ரி­ழந்த சோகச் சம்­ப­வத்தால் விளை­யாட்டு உலகம் அதிர்ச்­சியில் உறைந்­துள்­ளது.

இங்­கி­லாந்தில் டான்­காஸ்­டரில் கடந்த சனிக்­கி­ழமை குத்­துச்­சண்டை போட்டியொன்று நடை­பெற்­றது. இதில் நியூ­கேஸ்­டிலைச் சேர்ந்த ஸ்கொட் வெஸ்ட்கார்த், டெக் ஸ்பெல்­மேனை எதிர்­கொண்டார்.

இதில் 31 வய­தான ஸ்கொட் வெஸ்ட்கார்த் வெற்றி பெற்றார். வெற்றிபெற்ற சந்­தோ­ஷத்தில் போட்­டிக்­குப்பின் நிரு­பர்­க­ளுக்கு அவர் பேட்­டி­ய­ளித்துக் கொண்­டி­ருந்தார். அப்­போது திடீ­ரென மயங்கி விழுந்தார். உட­ன­டி­யாக அவர் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்டார்.

ஆனால் ஸ்கொட் வெஸ்ட்கார்த் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்தார். அவருக்கு மூளையில் இரத்தக்கசிவு ஏற்­பட்­டதால் மரணம் ஏற்­பட்­டி­ருக்­கலாம் என்று சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது. பேட்­டி­ய­ளித்துக் கொண்­டி­ருக்­கும்­போது திடீரென சரிந்து உயிரிழந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.