பதி­னோ­ரா­வது ஐ.பி.எல். தொட­ருக்­கான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலை­வ­ராக இந்­திய சுழற்­பந்து வீச்­சாளர் ரவிச்­ச­ந்­திரன் அஷ்வின் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இந்­தியன் பிரீ­மியர் லீக்கின் 11ஆ-வது தொடர் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி ஆரம்­ப­மா­கின்­றது. இதற்­கான வீரர்கள் ஏலம் கடந்த மாதம் நடை­பெற்­றது. 

அக்சர் படேலை மட்டும் தக்­க­வைத்­தி­ருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அஷ்வின், ஆரோன் பிஞ்ச், டேவிட் மில்லர், லோகேஷ் ராகுல், கருண் நாயர், மோகித் ஷர்மா, மனோஜ் திவாரி, யுவராஜ் சிங் போன்ற முக்­கிய வீரர்­களை ஏலத்தில் எடுத்­தது.

இவர்­களில் யார் தலை­வ­ராக நிய­மிக்­கப்­ப­டு­வார் என்ற எதிர்­பார்ப்பு கிளம்­பி­யது. இந்­நி­லையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  சார்பில் அந்த அணியின் ஆலோ­சகர் சேவாக் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலை­வ­ராக அஷ்வின் நிய­மனம் செய்­யப்­பட்­டுள்ளார் என்று அறி­வித்தார்.