தென் கொரியாவில் இடம்பெற்ற  பனிக்கால  ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் வடகொரிய  விளையாட்டுவீரர்களை மகிழ்ச்சி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தும் முகமாகக் கலந்துகொண்ட 230  பெண்களைக் கொண்ட   சர்ச்சைக்குரிய குழுவின் அங்கத்தவர்கள்  தாய்நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.

  அவர்கள்  வடகொரிய தலைவர் கிம் யொங் –உன்னின்  உயர்மட்ட உதவியாளர்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு வந்திருந்ததாக  பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர்கள் தாய் நாட்டுக்கு உடனடியாக திருப்பி அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடகொரிய அரசாங்கத்திற்கு எதிர்ப்புத்  தெரிவித்து அந்நாட்டை விட்டு வெளியேறியிருந்தவர்களே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

 அந்தப் பெண்கள்  தொடர்ந்து தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு ஏனைய ஆண்களுடன்  பழகுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக  இந்த வடகொரிய அரசாங்க எதிர்ப்பாளர்கள்  கூறுகின்றனர்.

 எதிர்ப்பாளர்களில் ஒருவரான கிம் ஹையுங் ஸோ( 54  வயது) கூறுகையில்,   'அந்தப் பெண்கள் கிம் யொங் – உன்னின்  விளையாட்டு அடிமைகள்' என்று தெரிவித்தார்.

 அதேசமயம்  அந்நாட்டிலிருந்து வெளியேறிய பிறிதொரு எதிர்ப்பாளரான  லீ ஸோ யியோன் (42  வயது)  தெரிவிக்கையில்,  "வட கொரியாவின் கலைக்  குழுவினர் வெளியே ஆடிப் பாடி அழகுநய கண்காட்சியை நடத்துகின்றனர்.  ஆனால் அவர்கள் அதைத் தொடர்ந்து  விருந்துபசாரங்களுக்கு சென்று பாலியல் சேவையை வழங்கும் துன்பத்தையும் எதிர்கொண்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

"அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்  வட கொரிய ஆளுங்கட்சியால் நடத்தப்படும் விருந்து பசாரங்களுக்கு சென்று உயர்மட்ட அதிகாரிகளுக்கு  பாலியல் சேவையை வழங்க வேண்டிய கட்டா

யத்திலுள்ளனர்"  என்று தெரிவித்த அவர், "அவர் கள்  அங்கு தமது உடல் களை வைத்து என்ன செய்ய வேண்டும் என  பணிக் கப்படுகிறதோ  அதை செய்ய வேண்டிய நிலையிலுள்ளனர்" என்று கூறினார்.