சிரி­யாவில் மோதல்­களால் பாதிக்­கப்­பட்ட பிராந்­தி­யங்­க­ளி­லுள்ள மக்­க­ளுக்­கென ஐக்­கிய நாடுகள் சபை  மற்றும் சர்­வ­தேச தொண்டு ஸ்தாப­னங்­களால் வழங்­கப்­பட்ட  உத­வி­களை விநி­யோ­கிப்­பதில்  ஈடு­பட்­டுள்ள ஆண்கள் பலரால் அங்­குள்ள பெண்கள் பாலியல்  ரீதி­யான சுய­ந­லத்­திற்­காக பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாக அதிர்ச்சித் தகவல்  வெளி­யா­கி­யுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் சனத்­தொகை  நிதி­யத்தால்  சிரி­யாவில்   நடத்­தப்­பட்ட  பாலின ரீதி­யான  ஆய்­வொன்­றி­லேயே மேற்­படி    தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

 இந்த ஆய்­வ­றிக்­கை­யா­னது 'சிரி­யா­வி­லி­ருந்து குரல்கள் – 2018'  என்ற தலைப்பில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

அந்த ஆண்கள்   நிவா­ரண உத­வி­க­ளாக  தொண்டு ஸ்தாப­னங்­களால் வழங்­கப்­பட்ட உண­வு­களை  பணத்­திற்­காக விற்­ப­தற்கும்  பாலியல்   ரீதி­யான  தேவை­களைப் பூர்த்தி செய்­வ­தற்கு பதி­லீ­டா­கவும் பயன்­ப­டுத்தி வரு­வது  கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக  தொண்டு ஸ்தாபன உத்­தி­யோ­கத்­தர்கள் தெரி­விக்­கின்­றனர்.

உணவுப் பொருட்­களைப் பெறு­வ­தற்­காக குறிப்­பிட்ட காலத் தவ­ணைக்கு  பாலியல் சேவை வழங்­கு­வ­தற்­காக  உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு பெண்­களும் சிறு­மி­களும் திரு­மணம் செய்து  வைக்­கப்­படும்  சம்­ப­வங்கள் அங்கு இடம்­பெற்­றுள்­ள­தாக மேற்­படி  ஆய்­வ­றிக்கை கூறு­கி­றது.

உண­வு­ப்பொ­ருட்­களை விநி­யோ­கிப்­பதில் ஈடு­ப­டு­ப­வர்கள்  பெண்­க­ளதும் சிறு­மி­க­ளதும்  தொலை­பேசி எண்­களைக் கேட்டுப் பெற்று   அவர்­க­ளது வீட்­டிற்கு  விஜயம் செய்து அவர்­க­ளுடன் ஒரு இரவைக் கழிப்­ப­தற்கு பதி­லாக உணவுப் பொருட்­களை  விநி­யோ­கிக்க பேரம் பேசிய சம்­ப­வங்கள் குறித்தும் அறிய முடி­வ­தாக அந்த ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆண்­களின் பாது­காப்­பின்றி  இருக்கும்  கைம்­பெண்கள், விவா­க­ரத்துப் பெற்­ற­வர்கள் மற்றும் இடம்­பெ­யர்ந்து வாழும் பெண்கள் ஆகி­யோரை  இந்த உதவி  விநி­யோக உத்­தி­யோ­கத்­தர்கள் பாலியல்  சேவை பேரத்­திற்­காக  பெரிதும் குறி­வைப்­ப­தாக  அந்த அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள் ­ளது. இந்­நி­லையில்   நிவா­ரணப் பொருட்­களைப் பெற்று விநி­யோ­கிப்­பதில் ஈடு­பட்­டுள்ள   சிரி­யாவைச் சேர்ந்த தொண்டு ஸ்தாப­னங்­களைச் சேர்ந்த ஆண் உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்த துஷ்பிரயோக நடவடிக்கை குறித்து   சகிப்புத் தன்மை காண்பிக்கப் போவதில்லை என ஐ.நா. முகவர் நிலையங்களும்  ஏனைய சர்வதேச தொண்டு ஸ்தாபனங்களும்  தெரிவித்துள்ளன.