கொழும்பு நகரில்  சீனர்­க­ளது வியா­பா­ரஸ்­த­லங்கள், கடைகள்   அதி­க­ரித்து வரு­வது  எவ்­வாறு என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன   அமைச்­ச­ர­வையில்  கேள்வி எழுப்­பி­யுள்ளார்.  

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில்   அமைச்­ச­ரவைக் கூட்டம்   நேற்று  ஜனா­தி­பதி செய­ல­கத்தில்  நடை­பெற்­றது.   இங்கு உள்ளூர்  சில்­லறை வியா­பா­ரி­களின்  பிரச்­சினை குறித்து  கவ­னத்­திற்கு கொண்­டு­வந்த ஜனா­தி­பதி   கொழும்பு நகரில்  சீனர்­க­ளது  வியா­பார நிலை­யங்கள், கடைகள் அதி­க­ரித்து வரு­கின்­றன.   சீனா­வி­லி­ருந்து பொருட்­களை நேர­டி­யாக கொண்டு வந்து இவர்கள் விற்­பனை செய்து வரு­கின்­றனர்.  இதனால்  தாம்  பாதிக்­கப்­ப­டு­வ­தாக   உள்ளூர் சில்­லறை வியா­பா­ரிகள் முறை­யி­டு­கின்­றனர் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்                        ளார்.  

 இவ்­வாறு  சீனர்­களின் கடைகள்  கொழும்பு நகரில் அதி­க­ரிப்­பது எப்­படி? என்று கேள்வி எழுப்­பிய ஜனா­தி­பதி உள்ளூர் சில்­லறை வியா­பா­ரிகள்  தமக்கு பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்து சுக­த­தாஸ உள்­ளக விளை­யாட்­ட­ரங்கில்  அடுத்­த­வாரம்  மாநா­டொன்­றினை ஏற்­பாடு செய்­தி­ருந்­தனர்.  இதைக் கேள்­வி­யுற்ற நான் அத்­த­கைய மாநாட்டை  நடத்­தாமல் என்­னுடன் பேச வரு­மாறு அழைத்­துள்ளேன். இவ்­வாறு உள்ளூர் சில்­லறை வியா­பா­ரிகள்  பாதிக்­கப்­ப­டு­வதை அனு­ம­திக்க முடி­யாது என்றும் ஜனா­தி­பதி எடுத்­துக்­கூ­றி­யுள்                                                                               ளார். 

வெளி­நாட்­ட­வர்கள்  ஒரு மில்­லியன் டொலர்­களை  முத­லீடு செய்தால் வர்த்­தக நிலை­யங்­களை அமைக்க முடியும் என்று    முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த தொகை ஐந்து மில்லியன் டொலர்களாக மாற்றப்பட்டுள்ளது என்று  பிரதமர்  இதன்போது விளக்கமளித்துள்ளார்.