(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளார்.

ஆந்திராவில் திருப்பதி தரிசனத்தில் ஈடுப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் சபாநாயகரை சந்தித்து கரந்துரையாடியுள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியீட்டியதன பின்னர் திருப்பதிக்கு சென்று மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளனர்.

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் இலங்கை இந்திய உறவுகள் உள்ளிட்ட பல்துறைசார் விடயங்கள் தொடர்பில் நட்புரீதியாக ஆந்திர முதல்வருடன் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடியுள்ளதாக  அவரது செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரொஹான் ரத்வத்த தெரிவித்தார்.

மேலும் சபாநாயகருடனும் கலந்துரையாடியதாகவும் அவர்குறிப்பிட்டார். இந்திய விஜயத்தை நிறைவு செய்து கொண்டு நாளை நாடு திரும்பவுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த விஜயத்தின் பின்னர் பல சாதகமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான 173 வானூர்தியில் இன்று அதிகாலை 4.30மணியளவில் இந்தியாவின் பெங்களுர் நகரை நோக்கி ஆறு பேர் உள்ளடங்கிய குழுவினருடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீர் விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.