திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கெஸ்ட் ஹவுசில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில், பெங்களூரில் இருந்து சிறப்பு விமானத்தில் ரேனிகுண்டா விமான நிலையம் சென்றடைந்தார்.

விஜயவாடாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்க இருந்த நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டதால் ரேனிகுண்டா விமான நிலையத்தில் இருந்து காரில் திருப்பதி மலைக்கு சென்றார்.

இந்நிலையில், திருப்பதி மலையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கெஸ்ட் ஹவுசில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தமை குறிப்பிடத்தக்கது.