இத்தாலியின்  நடைபெற்ற பேஷன் ஷோ ஒன்றில் மொடல்களுக்கு பதிலாக ட்ரோன்கள் இடம்பெற்று பார்வையாளர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தன.

பார்வையாளர்கள் அனைவரும் தங்கள் Wi-Fi இணைப்புகளை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டதால் 45 நிமிடங்களுக்கு காத்திருக்க வேண்டியதாயிற்று.

அறை முழுவதும் இருளில் மூழ்கியிருக்க திடீரென்று ட்ரோன்கள் கைப்பைகளை சுமந்து கொண்டு வரிசையாக வரத் தொடங்கின.

அவற்றை சீருடை அணிந்த பொறியாளர்கள் ரிமோட் கண்ட்ரோல்கள் மூலம் இயக்கினர்.

இனி அழகு நடை பயிலும் மொடல்களைக் காண முடியாதோ என பார்வையாளர்கள் ஏக்கத்துடன் காத்திருக்க ட்ரோன்களின் அணிவகுப்பு முடிந்ததும் மீண்டும் Cat Walk  பயிலும் மொடல்கள் ஃபேஷன் ஷோவை ஆக்கிரமித்துக்கொண்டனர்.

இந்த பேஷன் ஷோ Dolce and Gabbana பேஷன் நிறுவனத்தினால் நிகழ்த்தப்பட்டது.