பிரித்தானியாவில் தன்னைவிட்டு பிரிந்து சென்ற மனைவியை கொடூரமாக குத்திக் கொன்ற வழக்கில் கணவனுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் பிரிஸ்டல் நகரில் வசிக்கும் அடான் தஹிர்- ஆசியா ஹாரிஸ் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்றனர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி மனைவியை சந்திக்க வந்த அடான் தாஹிர் சண்டை போட்டுள்ளார்.

அக்கம்பக்கத்தினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கத்திக் குத்துக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசியா ஹாரிஸ்யை சடலமாக மீட்டனர்.

இதுகுறித்து பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஆசியா ஹாரிஸ் தன்னை கொல்லும் நோக்குடன் சண்டையிட்டதாகவும், எதிர்பாராதவிதமாக அவரே தற்கொலை செய்து கொண்டதாகவும் அடான் தஹிர் தெரிவித்துள்ளார்.

"என்னை விட்டு விடு ப்ளீஸ் கத்தியை கீளே போடு", "என்னை கொன்று விடாதே", "நான் உன்னை காதலிக்கிறேன்" என ஆசியா கத்தியதை அக்கம்பக்கத்தினர் கேட்டுள்ளனர்.

இதை அடிப்படையாக கொண்டு தீவிர விசாரணை நடத்தியதில் மனைவியை கொலை செய்ததை அடான் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பான விசாரணை பிரிஸ்டல் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.