வவுனியாவில் ஆடுகளைத்திருடி பொலிசாரிடம் விற்பனை செய்வதற்கு முயன்ற மூவரை பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா கணேசபுரம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்று ஆடுகளைத் திருடியவர்களை பொலிசார் தேடி வந்த நிலையில் அவர்களிடம் பொலிசார் வியாபாரிகள் போன்று சென்று அவர்கள் திருடிய மூன்று ஆடுகளையும் மீட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் மூவரையும் பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நடவடிக்கையில் வவுனியா குற்றத்தடுப்புப்பிரிவு பொலிஸ் சார்ஜன்ட் சுமித் தலைமையில் நிஷாம், சானக்க, சரத் ஆகியோர் மேற்கொண்டதுடன் சந்தேக நபர்களிடமிருந்து முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவர்கள் ஏற்கனவே மாடு திருடிய சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் இன்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.