வட அயர்லாந்தின் லிஸ்பேர்ன் பகுதியில் இன்று காலை 2 குழாய்க் குண்டுகள் வெடித்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இந்தச் சம்பவத்தில் எவரும் பாதிப்படையாது தப்பியுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேற்படி பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் தங்களது வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன் பொலிஸாரினால் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்துக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்குப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.