கௌட்டாவில் 5 மணிநேரம் மோதலை நிறுத்திவைக்க ரஷ்ய ஜனாதிபதி உத்தரவு!!!

Published By: Digital Desk 7

27 Feb, 2018 | 10:21 AM
image

சிரியாவின் கிழக்கு கௌட்டாவில் தினமும் 5 மணிநேரம் மோதலை நிறுத்திவைக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் கிழக்கு கௌட்டாவிலுள்ள பொதுமக்கள் இன்று முதல் வெளியேறுவதற்கான மனிதாபிமான உதவிக்கு வழிவகுக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மனிதாபிமான யுத்தநிறுத்தம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கெய் ஷொய்கு  அந்நாட்டு நேரப்படி காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை தினமும் மோதலை நிறுத்த வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் பொதுமக்கள் தப்பிச்செல்வதற்கு சிரிய செம்பிறைச்சங்கம் உதவுமெனவும் இது தொடர்பாகத் துண்டுப்பிரசுரங்கள் குறுஞ்செய்தி மற்றும் காணொளி மூலமாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுமெனவும் ஷொய்கு  கூறியுள்ளார்.

கிழக்கு கௌட்டாவில் கடந்த வாரம் முதல் இடம்பெற்றுவரும் மோதலில் சுமார் 560 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு கௌட்டாவில் மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில் 30 நாள் யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடிக்க ஐ.நா. பாதுகாப்புச்சபை வலியுறுத்தியிருந்தது. இருப்பினும் யுத்தநிறுத்த அறிவிப்புக்கு மத்தியில்  அப்பகுதியில் தாக்குதல்கள் இடம்பெற்றதைத் தொடர்ந்து 5 மணிநேரத்துக்கு தாக்குதலை நிறுத்த ரஷ்யா அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47