காணாமல்போன 9 வயதுடைய சிறுவனொருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம், இரணவில பகுதியில் வசித்த குறித்த சிறுவன் கடந்த 2 தினங்களாக காணாமல்போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவனின் சடலம் சிலாபம் இரணவில காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் சிலாபம் பொலிஸார், குறித்த சிறுவன் கொலைசெய்யப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கின்றனர்.