தெரு நாய் கடித்ததால்  ஐதராபாத்தில் 7 வயது சிறுமி உயிரிழந்த சோக சம்பவம் நடந்து உள்ளது. 

ஐதராபாத் சுப்ரா பகுதியைச் சேர்ந்த அனுராதா சங்கரெட்டி தம்பதிகளின் ஒரே மகள் சோனி வயது 7 சம்பவத்தன்று சிறுமி சோனி வீட்டு முன் விளையாடிக் கொண்டிருந்த வேளையில்  2 தெரு நாய்கள் சண்டையிட்டதை கண்டு அந்த நாய்கள்  மீது சோனி கல் வீசினார். 

உடனே நாய்கள் சோனி மீது பாய்ந்தது அவளை கடித்து குதறியது. 

அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு உஸ்மானியா மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை அளித்தும் அவர் பரிதாபமாக இறந்தார். 

ஆந்திரா தெலுங்கானா மாநிலத்தில் 50 லட்சம் தெரு நாய்கள் இருப்பதாகவும்,தெரு நாய்களின் தொல்லையால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி நாய்களை கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சி–நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் திணறி வருகின்றது