(எம்.எப்.எம்.பஸீர்)

பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் மருமகனும் பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன முன்னாள் பிரதானி அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்ட கசுன் பலிசேன  ஆகியோர் பிணை கோரி மீளாய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.  

சட்டத்தரணி சனர் விஜேவர்தன ஊடாக அவர்கள் கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த மீளாய்வு மனுவினை இன்று பிற்பகல் தாக்கல் செய்த நிலையில்,  அம்மனு மீதான விசாரணைகள் நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

 நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, குற்றப் புலனயவுப் பிரிவின் பணிப்பாளர் மற்றும்  சட்ட மா அதிபர் அகையோரை பொறுப்புக் கூறத்தக்க தரப்பாக பெயரிட்டே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.