வவுனியா ஆச்சிபுரம் 8 ஆம் ஒழுங்கையில் இன்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் 13 வயதுடைய மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கடந்த சில மாதங்களுக்கு முன் மாணவி (வயது - 13)  மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் பெற்றோரினால் காப்பாற்றப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டு குணமடைந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் வீடு திரும்பியுள்ளார்.

இந் நிலையில் இன்று மாலை வீட்டில் எவரும் அற்ற சமயத்தில் தூக்கில் தொங்கியுள்ளார். 

வெளியே சென்றிருந்த தாய் வீடு திரும்பிய போது தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட தனது மகளை அவதானித்துள்ளார். எனினும் மகள் இறந்த நிலையிலிலேயே காணப்பட்டுள்ளார். அயலவர்களின் உதவியுடன் சடலம் தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

தற்போது சடலம் பிரதேச பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.