ஸ்ரீலங்கன் எயார் லைன் விமான சேவைகளில் தாமதமேற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார் லைன் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

இரு விமானங்களில் ஏற்பட்ட தொழிலநுட்பக்கோளாறுகளையடுத்து விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார் லைன் விமான சேவை நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.

இந்நிலையில், விமான சேவை தொடர்பான விபரங்களை பயணிகள் அறிந்து கொள்வதற்காக 019- 7331979 என்ற அவசர தொலைத்தொடர்பு இலக்கத்தையும் ஸ்ரீலங்கன் எயார் லைன் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.