இந்தியாவின்  தஞ்சை அருகே மகன் எச்சில் துப்பியதால் நடந்த பிரச்சனையை தடுக்கப்போன அவரது தாய் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மணல்மேடு மேலத்தெருவைச் சேர்ந்த தாயின்  மகன் சதீஷ்கண்ணா நேற்று மாலை கோவிலில் அமர்ந்து கொண்டிருந்தபோது எச்சில் துப்பியது தெரியாமல் மணல்மேடு ஓடக்கரை பகுதியை சேர்ந்த நபர் மீது விழுந்திருக்கிறது. இதற்காக மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.

ஆனாலும் ஆத்திரமடங்காத குறித்த நபர் அவரது சகோதரர்களுடன் சேர்ந்து அவரது வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது  தந்தை, தாய்  மற்றும் பாட்டி ஆகியோர் சத்தம் போட்டு சண்டையை தடுத்துள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த குறித்த நபர்  மற்றும் அவருடன் வந்தவர்கள் மகன் தந்தை தாய் மற்றும் பாட்டியை அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதில்  தாய்க்கு தலையில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஏனைய மூவருக்கும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தஞ்சை  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் தாக்குதல் நடாத்திய குழுவினரை கைது செய்துள்ளனர்.