கொழும்பு, மருதானை பகுதியில் வைத்து கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் சந்தேகநபரிடமிருந்து 2.36 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளை கைப்பற்றியதாகவும் பொலிஸார்  தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 29 வயதுடையவர் என பொலிஸாரின் மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.