மட்டக்களப்பு - திராய்மடு பகுதியில் சர்வதேச தரத்திலான கடின பந்து கிரிகெட் மைதானம் அமைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று  மாலை மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் கைச்சாத்திடப்பட்டது.   

கோட்டமுனை விளையாட்டு கழக அனுசரணையில், புலம் பெயர்ந்து வாழும் கோட்டமுனை விளையாட்டு கழக உறுப்பினர்களின் உதவியுடன் சுமார் 10 ஏக்கர் நிலபரப்பில் சர்வதேச தரத்திலான கடின பந்து கிரிகெட் மைதானம் அமைப்பதற்கான ஒப்பந்தமே கைச்சாத்திடப்பட்டுள்ளது.