ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த துருக்கி நாட்டை சேர்ந்த 15 பேருக்கு தூக்குத் தண்டணை விதித்து ஈராக் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளை ஈராக் இராணுவம் கைப்பற்றியபோது அந்த இயக்கத்தில் இணைந்து இராணுவத்துக்கு எதிராக சண்டையில் ஈடுபட்ட துருக்கி மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் பிடிபட்டனர். 

இவர்கள் மீது பாக்தாத் நகரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதில் துருக்கி நாட்டின் குடியுரிமை பெற்றுள்ள 15 பேருக்கு தூக்குத் தண்டணை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கடந்த வாரம் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக ஒரு துருக்கி பெண்ணுக்கு தூக்குத் தண்டணையும்,10 பெண்களுக்கு ஆயுள் தண்டணையும் விதிக்கப்பட்டது.

தண்டணை விதிக்கப்பட்ட அனைவரும் மேல் முறையீடு செய்ய இயலும் என்று பாக்தாத் குற்றவியல்  நீதிமன்ற  செய்தித் தொடர்பாளர் விடுத்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.