இரா­ணு­வத்தைச்  சேர்ந்த மேஜர் முத்­தலிப், ஜெனரல் பாரமி குல­துங்க ஆகிய இரு­வ­ரையும் சதித்­திட்டம் தீட்டி கொலை செய்­வ­தற்கு பயன்­ப­டுத்­து­வ­தற்­காக ரி–56 ரக தன்­னி­யக்க ஆயு­தத்தை உட­மையில் வைத்­தி­ருந்­த­தாக 2006ஆம் ஆண்டு பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பொலி­ஸா­ரினால்  கைது செய்­யப்­பட்ட  வாசு­கோபால் தஜ­ரூபன்  என்­பவர்  12 வரு­டங்­களின் பின்னர்  நீர்­கொ­ழும்பு மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­யினால் விடு­தலை செய்­யப்­பட்டார்.

2005ஆம் ஆண்டு மேஜர் முத்­தலிப்,  ஜெனரல் பாரமி குல­துங்க ஆகிய இரு­வ­ரையும் கொலை செய்ய சதித்­திட்டம் தீட்­டிய­தாக விடு­தலைப்புலி  உறுப்­பி­ன­ரான வாசு­கோபால் தஜ­ரூ­ப­னுக்கு எதி­ராக  சட்­டமா அதி­ப­ரால் சதித்­திட்டம் தீட்­டி­ய­தாக மூன்று  வழக்­குகள் கொழும்பு மேல் நீதி­மன்­றத்­திலும்  ரி–56 தன்­னி­யக்க ஆயு­தத்தை உட­மையில் வைத்­தி­ருந்­த­தாக நீர்­கொ­ழும்பு மேல் நீதி­மன்றில் ஒரு வழக்­கு­மாக நான்கு வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தன. கொழும்பு மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்­கு­களில் விடு­த­லை­யா­கி­யி­ருந்த வாசு­கோபால் தஜ­ரூப­னுக்கு எதி­ராக நீர்­கொ­ழும்பு மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கு கடந்த 23ஆம் திகதி விசா­ர­ணை­க்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது 

அரச தரப்­பினால் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்ட சாட்­சி­க­ளினை குறுக்கு விசா­ரணை செய்த எதி­ரியின் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி தவ­ராசா, அர­ச­த­ரப்பு  சாட்­சி­யங்­களின் சாட்­சியத்தில் பல முரண்­பா­டு­களை நீதி­மன்றின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­த­துடன் எதி­ரி­மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டை அரச தரப்பு நியா­ய­மான சந்­தே­கத்­திற்கு அப்பால்  நிரூ­பிக்கவில்­லை­ என்­பதை சுட்­டிக்­காட்­டினார்.  எதி­ரியை விடு­தலை செய்­யு­ம்படி அவர் வாதத்தை முன்­வைத்­த­தை­ய­டுத்து நீர்­கொ­ழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி எதி­ரியை விடுதலை செய்தார்

12 வருடங்களின் பின்னர் தனக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட  நான்கு வழக்குகளிலிருந்தும் விடுதலையான  வாசுகோபால் தஜரூபனை உறவினர்கள் நீதிமன்றிலிருந்து அழைத்துச் சென்றனர்.