திருகோணமலை மனையாவெளிக் கடலில் குளித்துக் கொண் டிருந்த எட்டு இளைஞர்களில் இருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. மற்றைய இளைஞரது சடலம் தொடர்ந்தும் தேடப்பட்டு வருகிறது.

16 வயதுடைய சிந்துஜன் சடலமாக மீட்கப்பட்டார். 22 வயதுடைய இளைஞனைத் தேடும் பணியை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் கடலுக்குச் சென்ற இருவர் ஆபத்தான நிலையில் திருகோணமலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை மாலை பாடசாலை மாணவாகள் சிலர் அவர்களுடைய நண்பர்களுடன் மனையாவௌி கடற்கரைக்கு குளிக்க சென்றுள்ளனர். இக்கடற்கரைப்பிரதேசம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக கடற்படையின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வந்துள்ள போதும் சில தினங்களாக அப்பகுதிக்கு சென்றுவர அனுமதி வழங்கிய நிலையில் இம்மாணவாகள் 8 போ் கடற்கரைக்கு குளிக்க சென்ற நிலையிலேயே இப்பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவத்தினால் மனையாஎவளி பிரதேசமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது்