வெலிமடை போகஹகும்புர பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு, பொரலந்தையிலுள்ள தமது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தவரே போகஹகும்புர பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள மண்மேடு ஒன்றில் மோதுண்டு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன் இவ்விபத்தில் உயிரிழந்தவர் பொரலந்தை பகுதியை சேர்ந்த 63 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்த மூவர் பொரலந்தை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாரதியின் தூக்க மயக்கமே விபத்திற்கு காரணம் என விசாரணைகளை முன்னெடுத்து வரும் போகஹகும்புர பொலிஸார் தெரிவித்தனர்.