நாட்டின் கிழக்கு, ஊவா, மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, களுத்துறை, பொலனறுவை ஆகிய மாவட்டங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Image result for மழை  virakesari

அதேநேரம் நாட்டின் ஏனைய பல பிரதேசங்களில் 100 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் ஹம்பாந்தோட்டையிலிருந்து காலி ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, வடக்கு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் கட­லுக்கு செல் லும் மீன­வர்கள் உட்­பட பொதுமக்கள் மிகுந்த அவ­தா­னத்­துடன் செயற்­ப­ட­வேண்டும். மழை பெய்யும் சந்தர்ப்பங்களின் போது மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். அச்சந்தர்ப்பங்களில் மின் சாதனங் களை மக்கள் பயன்படுத்தும் போதும் மேகமூட் டத்துடனான வானிலை காணப்படும் போதும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் காலநிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.