மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு அருகாமையில் இன்று காலை ஜீப் ரக வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 35 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில் அதில் பயணித்த மதகுரு உட்பட மூவர் கடும்காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் சிவனொளிபாதமலை யாத்திரைக்காக சென்றுக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாகன சாரதிக்கு வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.