இன்றைய திகதியில் திருமண மான தம்பதிகள் பெரும்பாலும் இயற்கையான முறையில் தாம்பத்யம் மேற்கொண்டு கருத்தரிப்பது என்பது குறைந்து வருகிறது. ஆண் பெண் என இருவரும் உடல் ரீதியாக ஆரோக்கியமாக இருந்தும் இயற்கையான முறையில் தாம்பத்யம் மேற்கொண்டும் கருத்தரிப்பதில் இடையூறுகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு ஆண்களைப் பொறுத்தவரை அவர்களின் உடல் எடையும், வயிற்றுப் பகுதி இயல்பான அளவை விட பெரிதாக இருப்பதும் ஒரு காரணமாகக் கருதப்படுகின்றது. இந்நிலையில் இப்பிரச்சினைக்கு MES மற்றும் X SHOT என்ற நவீன சிகிச்சை மூலம் தீர்வு கிடைத்து வருகிறது. இதனைப் பற்றிய மருத்துவ விளக்கங்களை அறிந்துக் கொள்ள இத்தகைய சிகிச்சையில் அதிகளவிலான வெற்றி வீதத்தை அளித்து தம்பதிகளின் நம்பிக்கைக்குரியவராக திகழும் சென்னை பி. எம். மருத்துவமனையில் பணியாற்றும் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை நிபுணரான டொக்டர்  ரி.ரஜினிகாந்தை சந்தித்தோம்.

இந்த சிகிச்சையைப் பற்றி தம்பதிகள் என்ன தெரிந்துகொள்ளவேண்டும்? இந்த சிகிச்சை எப்படி மேற்கொள்ளப்படுகிறது?

டெல்லியில் உள்ள பிரபல மருத்துவ மனைகளில் பி. ஆர். பி. எனப்படும் பிளேட் லெட் ரிச் ப்ளாஸ்மா என்ற சிகிச்சையின் மூலம், சத்திர சிகிச்சையற்ற முறையில் MES (Male Enhancement Shot) என்ற பெயரிலான சிகிச்சையின் மூலம் பலர் பலனடைந்திருப்பதை ஒரு பயிற்சி பட்டறையில் பங்குபற்றிய போது தெரிந்து கொண்டேன். அதனை நாங்களும் சில தம்பதிகளுக்கு அவர்களின் சம்மதத்தின் பெயரில் பரிசோதனை அடிப்படையில் மேற்கொண்டு வெற்றிப் பெற்றோம். இதன் மூலம் தெற்காசிய ஆண்களுக்கான இனப் பெருக்க உறுப்பின் இயல்பான அளவான நான்கு இஞ்ச் என்ற அளவு கிடைத்துவிடும் என்பதை உறுதி செய்து கொண்டோம். ஒரு சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அமர்வுகளில் இத்தகைய சிகிச்சை அளிக்கவேண்டியதிருக்கும் என் பதையும் அறிந்துகொண்டோம். அதன் பிறகு அவர்கள் இயற்கையான முறையில் கருத்தரிப்பதையும் கண்டோம்.

பரம்பரையின் காரணமாக ஒரு சில ஆண்களுக்கு அவர்களின் இனப்பெருக்க உறுப்பு, இருபது வயதில் ஒன்றரை இஞ்ச் அளவேயிருக்கும். இவர்களுக்கு இத்தகைய சிகிச்சை பலனளிக்கும். ஒரு சிலருக்கு அவர்களின் உடற்பருமன் காரணமாக அந்த இனப்பெருக்க உறுப்பின் மேல்பகுதியில் இயல்பை விட அதிகளவிலான கொழுப்புகள் தேக்கமடைந்திருக்கும். இதன் காரண மாகவும் அவற்றின் செயல்பாட்டில் கோளா றுகள் ஏற்படக்கூடும். இது போன்ற தருணங்களில் நாங்கள் அவர்களின் கொழுப்புகளை லைப்போசக் ஷன் என்ற சத்திர சிகிச்சையின் மூலம் உறிஞ்சி எடுத்து, பின்னர் பி. ஆர். பி. மூலமாக சிகிச்சையை எடுத்துக் கொள்ளும் போது அவர்களின் இனப்பெருக்க உறுப் பும் இயல்பான அளவிற்கு வளர்ச்சி யடைந்து விடுகிறது. இவர்களும் பின்னர் இயற்கையான முறையில் கருத்தரிப்பிற்கு ஆளாகுவதை கண்டோம். அத்துடன் திரு மணமான தம்பதிகளில் பலர் பலமுறை ஐ. யூ. ஐ. எனப்படும் செயன்முறை கருத் தரிப்பு சிகிச்சையில் எதிர்மறையான பலனை எதிர்கொண்டவர்களும் இவ்வகை யினதான சத்திர சிகிச்சையற்ற எளிய சிகிச்சையின் மூலம் முழுமையான பலனை அடையலாம்.

இத்தகைய சிகிச்சைக்கு பிறகு பக்க விளைவுகள் ஏதுமில்லை. அவர்களுடைய இரத்த அணுக்களை வைத்து சிகிச்சை செய்வதால் ஒவ்வாமையும் ஏற்படாது. இனப்பெருக்க உறுப்பு போதிய அளவிற்கு ஆரோக்கிய மேம்பாடு அடைந்துவிடும். இந்த சிகிச்சை செய்து கொண்ட பின்னர் இரண்டு நாட்கள் வரை தம்பதிகள் தங்களுக்குள் தாம்பத்தியத்தில் ஈடுபடக்கூடாது என மருத்துவர்கள் சொல்லும் அறிவுரையை உறுதியாக பின்பற்றவேண்டும். அதே போல் பெண்களின் இனப்பெருக்க உறுப்பு களில் ஏற்படும் கோளாறுகளையும், தடைகளையும்  பி. ஆர்.பி. எனப்படும் பிளேட்லெட் ரிச் பிளாஸ்மா மற்றும் X SHOT என்ற சிகிச்சையின் மூலம் இயல்பான அளவிற்கும், அதன் செயல்பாடுகளுக்கு பொருத்தமானதாகவும் மாற்றியமைக் கிறோம். 

ஹெயர் ட்ரான்ஸ்ப்ளாண்ட் சிகிச்சையில் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து ?

ஹெயர் ட்ரான்ஸ்ப்ளாண்ட்டேசன் சிகிச் சையில் தற்போது பி.ஆர். பி. எனப்படும் சத்திர சிகிச்சையற்ற முறையிலான சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்தகைய சிகிச்சைக்கு பின்னர் மூன்றிலிருந்து நான்கு நாட்கள் வரை இப்பகுதியில் அரிப்பு உணர்வு இருக்கும். ஒரு சிலருக்கு வீக்கம் கூட ஏற்படலாம். ஆனால் அதனைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. அதன் போது நிவாரணமாக ஸ்லைன் ஸ்பிரேவை பயன்படுத்துவார்கள். பின்னர் ஹெயர் ட்ரான்ஸ்ப்ளாண்ட் செய்யப்பட்ட இடத்தில் பிரத்தியேகமான மருந்துகளை பயன்படுத்தி  தழும்புகள் ஏற்படுவதை முற்றாக தவிர்ப்போம். இத்தகைய முறையில் பதியப்படும் முடிகள் மீண்டும் வளர்ச்சியடைவது 95 சதவீதம் வரை உறுதிப்படுத்தப்படுகிறது. இத்தகைய சிகிச்சையின் போது மூன்று மாதத்திற்கு பிறகு பதியப்பட்ட முடிகள் உதிரத் தொடங்கும். இந்த தருணத்தில் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவார்கள். இதன் போது நாங்கள் அவர்களிடத்தில் முடியின் வேர்க்கால்களை பதியமிட்டிருக்கிறோம் என்று நினைவூட்டுவோம். பிறகு முடி உதிர்ந்து மீண்டும் இயற்கையாக வளரத் தொடங்கும் என்று அறிவுறுத்துவோம். அதன் பிறகு எப்பகுதியில் வழுக்கையானதோ அங்கு மட்டும் தான் இந்த பி. ஆர். பி. சிகிச்சையை மேற்கொள்வோம். ஏனைய பகுதிகளிலுள்ள முடிகள் நரைக்கத் தொடங்கும். அவை உதிரத் தொடங்கும். அதற்கும் இதற்கும் ஒப்பிடக்கூடாது. அந்த முடிகளும் விழாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மருத்துவர்களை கலந்து ஆலோசித்து அதனை பின்பற்றவேண்டும். 

ப்ரெஸ்ட் லிஃப்ட் சிகிச்சை பாதுகாப்பானதா?

பாதுகாப்பானது தான். ஆனால் இத்தகைய சிகிச்சையை எப்போதும் செய்துக்கொள்கிறோம் என்பதிலும் கவனம் செலுத்தவேண்டும். பொதுவாக பெண்களுக்கு அவர்களின் டீன் ஏஜ் பருவம் முடியும் வரை மார்பகம் வளர்ச்சி யடைந்துக்கொண்டேயிருக்கும். பிறகு தான் அது ஒரு நிலையான அமைப் பினைப் பெறும். இந்நிலையில் ஒரு சில பெண்களுக்கு இந்த பருவ வயதி லேயே மார்பகத்தின் வளர்ச்சி என்பது முறையானதாக இருக்காது அல்லது போது மான வளர்ச்சியைப் பெற்றிருக்காது. இதனால் பெண்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் மார்பக வளர்ச்சியின்மையால் பாதிக் கப்பட்ட பெண்கள் எங்களிடத்தில் சிகிச்சைக்கு வந்தால் அவர்களின் வயதைப் பொறுத்து ஆலோசனையையும், சிகிச்சையையும் மேற்கொள்வோம். பதினைந்து வயது அல்லது பதினெட்டு வயதிற்குள் இருந்தால் அவர்களுக்கு சிறிய அளவிலான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவோம். பத்தொன்பது வயதிற்கு பிறகே அதாவது டீன்ஏஜ் பருவம் முடிவடைந்த பிறகே அங்கே சத்திர சிகிச்சையை மேற்கொள்ளவேண்டுமா? வேண்டாமா? என்பதைப் பற்றி பரிசீலிப்போம். அதே சமயத்தில் தற்போது யாருக்கும் இம்ப்ளாண்ட் என்ற சத்திர சிகிச்சையை இதற்காக மேற்கொள்வதில்லை. அதற்கு பதிலாக Breast Augmentation = Fat Transfer என்ற சிகிச்சையை மேற்கொள் கிறோம். மார்பக பகுதியில் இயல்பாக இருக்கவேண்டிய அளவைக் காட்டிலும் குறைவான கொழுப்பு இருப்பதே இதற்கு காரணம். இவர்களின் உடலில் வயிறு, தொடை, பின்புறப் பகுதி மற்றும் பின்புறப் பகுதியின் கீழ் பகுதி ஆகிய இடங்களில் கொழுப்புகள் தேவையைக் காட்டிலும் சற்று கூடுதலாக இருக்கும். இத்தகைய கொழுப்பை லைபோசக் ஷன் மூலம் உறிஞ்சி எடுத்து, அதனை அப்படியே பயன்படுத்தாமல் பிரத்தியேகமான முறையில் கொழுப்பை மட்டும் தனியாக பிரித்தெடுத்து, அதனை சுத்தப்படுத்தி சிகிச்சைக்காக பயன்படுத்துகிறோம். இதனால் அந்த சிகிச்சைக்கு பின்னர் அவர்களின் மார்பகங்கள் வளர்ச்சி யடையும். இதன் முழுமையான வளர்ச்சியைப் பெற மூன்று மாதங்கள் கூட ஆகும். அதன் பிறகு எந்தவித பின்விளைவுகளும் வராது. அவர்களின் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தாழ்வு மனப்பான்மையும் அகலும், ஏனைய பெண்களைப் போல் சந்தோஷமாக இருப்பார்கள். அதேபோல் திருமணத்திற்கு பிறகு குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு ஒரு சில பெண்களின் மார்பகங்கள் இயல்பான தோற்றத்தில் இல்லாமல் இருக்கும். அவர்களுக்கும் இத்தகைய சிகிச்சையின் மூலம் இயல்பானதாக ஆக்க இயலும்.

முகத்தோற்றத்தை இளமையாக வைத்திருக்க திரெட் லிஃப்ட் என்ற சிகிச்சை பொருத்தமானது என்று பரிந்துரைக்கிறார்களே. அதைப் பற்றி..?

இன்றைய திகதியில் இளம் வயதிலேயே ஆண்களுக்கும், பெண்களுக்கும் கண் களுக்கு அருகில் சுருக்கங்கள் தோன்றும். ஒரு சிலருக்கு நெற்றியில் சுருக்கங்கள் விழும். அவர்களின் தோற்றம், வயது கூடிய முதுமையான தோற்றத்தில் இருக்கும். இவர்களுக்கு அவர்களின் முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் உள்ள சுருக்கங்களை களைவதற்காக திரெட் லிஃப்ட் என்ற சிகிச்சை பலனளிக்கிறது. இத்தகைய சிகிச்சையின் போது பிரத்தி யேகமான நூலை சுருக்கம் விழுந்த பகுதிக்கு அருகின் உள்ளே தோலின் கீழ்ப் பகுதியில் பொருத்திவிடுவோம். அதன் பிறகு அந்த நூலை இழுத்து முடிச்சுப் போட்டுவிடுவோம். உள்ளே பொருத்தப்பட்ட நூலைச் சுற்றி ஒருவகையான கொலாஜீன் உற்பத்தியாகி அந்த நூலை இறுக்கும். இதனால் நாளடைவில் அப்பகுதி யிலுள்ள சுருக்கங்கள் மறைந்துவிடும். இந்த சிகிச்சையை ஒரு முறை தான் மேற் கொள்ளவேண்டும். இதன் பலன் ஒன்றரை ஆண்டுகள் வரை நீடித்திருக்கும். ஒரு சிலருக்கு வீக்கம் காணப்படும். ஆனால் அதனால் எந்த பாதிப்பும் இல்லை. அதே சமயத்தில் வலி இருக்காது. பின்விளைவும் ஏற்படாது. முப்பது வயது முதல் அறுபது வயது வரையுள்ளவர்களுக்கு பலனளிக்கக்கூடிய சிகிச்சை. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்: 0091 7010648988 (WhatsApp), மின்னஞ்சல் முகவரி cosy@bmhospitals.com/springmedspa@gmail.com

சந்திப்பு: புகழ்