கிழக்கு மாகா­ணத்தில் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் தனியார் பிரத்­தி­யேக வகுப்­பு­களை பகல் 1மணி­வரை நடத்த தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ள­தாக கிழக்கு மாகாண கல்­வி­க­லா­சார அமைச்சு சுற்­ற­றிக்கை மூலம் அறி­வித்­துள்­ளது.

Image result for பிரத்­தி­யேக வகுப்­புகள் நடத்த தடை

மாகாண கல்வி அமைச்சின் செய­லாளர் திசா­நா­யக்­க­வினால் மாகாணக் கல்­விப்­ப­ணிப்­பாளர் மற்றும் வலயக் கல்விப்  பணிப்­பா­ளர்­க­ளுக்கு இந்த சுற்­ற­றிக்கை அனுப்­பப்­பட்­டுள்­ளது.

ஆளு­நரின் பணிப்­பு­ரைக்­க­மை­வாக ஞாயிறு தினங்­களில் சமூக ஆன்­மிக  வளர்ச்­சிக்கு ஏது­வாக  அன்று பகல் 1மணிவரை தனியார் வகுப்புகளை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.