கல்பிட்டி, கந்தகுளியா கடற்கரையில் 5 கோடி பெறுமதியான 7 கிலோ கிராம் தங்கத்துடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவ்விரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடக பேச்சாளர் தினேஸ் பண்டார தெரிவித்தார். 

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கத் திணைக்களத்தினர் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.