இந்தியாவின் பீகாரில் அரச பாடசாலை ஒன்றின் வெளியே வேகமாக வந்த கார் ஒன்று மோதியதில் 9  மாணவர்கள் பலியாகியுள்ளனர்.

பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தில் மினாபூர்  பகுதியில் அமைந்துள்ள அரச பாடசாலையில் இன்று பள்ளி கூடம் முடிந்து பள்ளி மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது வேகமுடன் வந்த கார் ஒன்று மாணவர்கள் மீது மோதியுள்ளது. 

இச்சம்பவத்தில் 9 மாணவர்கள் பலியாகியதோடு 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வாகன விபத்திற்கு காரணம் சாரதி மது போதையில் வாகனத்தை செலுத்தியமை என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.