ஆப்கானிஸ்தானில் பரா மாகாணத்தில் அமைந்த இராணுவ தளம் மீது தலிபான்கள் இன்று நடத்திய தாக்குதலில் 18 வீரர்கள் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தி பொதுமக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இந் நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் பரா மாகாணத்தில் பாலா புளுக் மாவட்டத்தில் அமைந்துள்ள அந்நாட்டின் இராணுவ தளம் ஒன்றின் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் 18 வீரர்கள் பலியாகியுள்ளனர் மேலும்  2 வீரர்கள் காயமடைந்துள்ளனர். 

இதனை தொடர்ந்து அப் பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இத்  தாக்குதலுக்கு தலிபான்  அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது