பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு தொடர்பிலான ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ இலங்கைக்கு வரவழைக்கப்பட்டமை அவரது பாதுகாப்பினை கருத்திற் கொண்டே என இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த சுதந்திர தினத்தன்று பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களை எச்சரிக்கும் வகையில் செயற்பட்டிருந்தார் என பிரியங்க பெர்னான்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனை அடுத்து அவர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டதுடன், ஜனாதிபதியின் உத்தரவில் அவர் மீண்டும் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தார்.