கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியா தலைநகர் மொகடிசுவில் உள்ள அரசு அலுவலகங்களை குறிவைத்து நேற்று அடுத்தடுத்து இரண்டு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

இந்த இரட்டை கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் 18 பேர் பலியானதோடு  20க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

முதல் தாக்குதலில் தற்கொலைப்படை தாக்குதல் தாரி காரில் வெடிகுண்டு பொருள்களை நிரப்பி வெடிக்கச் செய்துள்ளார் எனவும் இரண்டாவது தாக்குதல் உள்ளூர் அரசு தலைமை அலுவலகங்களை குறி வைத்து அரசு அலுவலகங்கள் அமைந்த பகுதியில் இருந்த சோதனை சாவடி மீது வெடிகுண்டுகள் நிரப்பிய காரை வெடிக்கச் செய்துள்ளார் எனவும் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல்களுக்கு உடனடியாக எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.