உரமானியம் தொடர்பாக தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு புதியதொரு கொள்கையை உருவாக்குவதன் மூலம் அவற்றுக்கான தீர்வினைப்  பெற்றுக் கொள்ளவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

தேர்தலின் பின்னர் இடம்பெற்ற முதலாவது தேசிய பொருளாதார சபை கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில்   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்  இடம்பெற்ற போதே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

இத் தேசிய பொருளாதார சபையில் உரமானிய பிரச்சினைக்கான புதிய கொள்கை உருவாக்கம் தொடர்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

உர மானியம் வழங்குதல் தொடர்பாக ஏற்பட்டுள்ள இரண்டு பிரதான பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.  

தற்போது பணமாக வழங்கப்படும் உர மானிய முறையில் திருத்தம் செய்யவும் எதிர்காலத்தில் உர தட்டுப்பாடு ஏற்படாதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

அத்துடன், விவசாயிகளின் உர தேவையை பூர்த்திசெய்வதுடன்,  விவசாய நிலங்கள் மாசடையாது பாதுகாக்கவும் பொருத்தமானதொரு செயற்திட்டத்தை தயாரிக்குமாறு தேசிய பொருளாதார சபைக்கும் விவசாய அமைச்சிற்கும்  ஜனாதிபதியால்  ஆலோசனை வழங்கப்பட்டது.  

மேலும் உரத் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு அரசாங்கம் உரம் பெற்றுக்கொள்ளக்கூடிய நிறுவனங்களின் பெயர் விபரங்களை பேண வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கான சிறந்த முறையொன்றினை அறிமுகப்படுத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 கிளைபோசேட் தடை தொடர்பாக இதன்போது பல ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது.  கிளைபோசேட் தொடர்பாக தற்போதுள்ள சட்டதிட்டங்களில் திருத்தங்களை கொண்டுவந்து புதிய கொள்கை ஒன்றிணை அறிமுகப்படுத்துவதன் ஊடாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என தேசிய பொருளாதார சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப தேயிலை மற்றும் இறப்பர் பயிர்ச்செய்யப்படும் நிலங்களில் கிளைபோசேட் பாவனைக்கு அனுமதியளிக்க ஆலோசிக்கப்பட்டுள்ளதுடன்,  இது தொடர்பாக ஆய்வுவொன்றினை மேற்கொண்டு புதிய கொள்கைகளை உருவாக்கவும் இதன்போது ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

உரம், மானியம், ஜனாதிபதி, தீர்மானம்