இஸ்லாமியர் என கருதி இந்திய வம்சாவளியினர் மீது இனவெறித் தாக்குதல்!!!

Published By: Digital Desk 7

23 Feb, 2018 | 04:46 PM
image

இங்கிலாந்து பாராளுமன்ற வளாகத்தில் சீக்கியர் ஒருவரை தலைப்பாகையை அகற்றி இனவெறியுடன் தாக்குதல் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இங்கிலாந்து நாட்டில் தொழிலாளர் கட்சி அமைச்சராக இந்திய வம்சாவளி சீக்கியர் தன்மன்ஜித் சிங் தேஷி பதவி வகித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக 37 வயதான பஞ்சாபை சேர்ந்த ரவ்னித் சிங்  என்பவர் பாராளுமன்ற வளாகத்தில் காத்திருந்துள்ளார்.

பிற பார்வையாளர்களுடன் சேர்ந்து அவரும் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி ஓடி வந்த ஒருவர் ‘‘முஸ்லிமே திரும்பிச் செல்’’ என ஆவேசமாக கூறியுள்ளார்.

மேலும் ரவ்னித் சிங்கின் தலைப்பாகையை அகற்றவும் முயன்றுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து ரவ்னித் சிங் கூறுகையில்

‘‘என்னை திட்டியதுடன், இனவெறி உணர்வுடன் என்னை தாக்கவும் முற்பட்டார். அவர் யார் என்று தெரியவில்லை. வெள்ளை இனத்தை சேர்ந்தவர் என எண்ணுகிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

நடந்த சம்பவம் குறித்து இந்திய வம்சாவளி எம்.பி தன்மன்ஜித் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47