(இரோஷா வேலு)

இலங்கையானது வாட்ஸ்ஆப் ஊடாக சிறுவர் ஆபாச காணொளிகளை அதிகம் பகிரும் ஓர் நாடாக உருமாறி வருவதாக இந்திய மத்திய விசாரணைகள் பணியகம் (சி.பி.ஐ.) தெரிவித்துள்ளது. 

இப்படியான சிறுவர்களின் ஆபாச காணொளிகளை பதிவேற்றம் செய்யும் குழுவொன்று அண்மையில் இந்தியாவின் டெல்லியில் கைதுசெய்யப்பட்டுள்ளது. அந்த குழுவிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் தீவிர விசாரணைகளிலேயே இந்த உண்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த குழுவின் வாக்குமூலங்களின் படி மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பான அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.