இலங்கை மற்றும் இந்­திய கடல் எல்­லை­ க­ளுக்­கி­டையே அமைந்­துள்ள கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆலய வரு­டாந்த பெரு­ விழா இன்று  கொடி­யேற்­றத்­துடன் ஆரம்பமாகவுள்ளது.

இன்று மாலை 4 மணிக்கு கொடி­யேற்­றத்­துடன் நற்­க­ருணைப் பெரு­விழாத் திருப்­பலி வழி­பா­டுகள் நடை­பெறும். நாளை  சனிக்­கி­ழமை காலை 7 மணிக்கு யாழ்.மறை­மா­வட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்­பி­ர­காசம் ஆண்­டகை மற்றும் காலி மறை­மா­வட்ட ஆயர் றேமன் விக்­கி­ர­ம­சிங்க ஆண்­டகை ஆகியோர் இணைந்து பெரு­விழா கூட்டுத் திருப்­பலியை நிறை­வேற்­ற­வுள்­ளனர். 

இந்த நிலையில், 62 விசைப்படகில் 1920 பக்தர்கள் கச்சத்தீவு புறப்பட்டு சென்றனர். 

இதில் 1532 ஆண் பக்தர்களும், 336 பெண் பக்தர்களும், ஆண் குழந்தைகள் 29 மற்றும் பெண் குழந்தைகள் 23 பேர் என 1920 பக்தர்கள் கச்சத்தீவு சென்றனர். 

2103 பக்தர்கள் தங்களின் பெயர்களை பதிவேற்றம் செய்திருந்த நிலையில்  1920 பக்தர்கள் மட்டுமே கச்சத்தீவு சென்றுள்ளனர்.